விஜய் கண்ணுக்கு திரிஷாவை தவிர வேற யாரு தெரிவா?.. வம்பிழுத்த கட்டப்பா மகள்..!

by Ramya |
tvk vijay
X

Actor Vijay: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தன்னுடைய கடைசி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது.

இப்படத்தில் நடிகர் விஜயுடன் சேர்ந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் இருந்த வருத்தத்தில் இருக்கிறார்கள்.


விஜய் அரசியல் பயணம்: நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய உடனே அதை தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்து பின்னர் கொடி, பாடல், மாநாடு என அனைத்தையும் மிகச் சிறப்பாக செய்து முடித்தார்.

அதிலும் கடந்த ஆண்டு விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தினார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அதில் நடிகர் விஜய் பேசியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆளும் கட்சிகளான திமுகவையும், பாஜகவையும் கடுமையாக சாடி பேசி இருந்தார். பாஜகவை மறைமுகமாக விமர்சித்தாலும் திமுகவை நேரடியாக தாக்கி பேசியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

வொர்க் பிரம் ஹோம் அரசியல்: கட்சி ஆரம்பித்த பிறகு நடிகர் விஜய் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். அதிலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கியது. மேலும் ஒவ்வொரு தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளுக்கு அவரின் உருவ புகைப்படத்தை கட்சி அலுவலகத்தில் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது போன்றவை தொடர்ந்து விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.

நடிகர் விஜய் வொர்க் ப்ரம் ஹோம் அரசியல் செய்து வருகின்றார் என்று அவரை சாடினார்கள். இதனைத் தொடர்ந்து பரந்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்ள நடிகர் விஜய் நேரடியாக சென்று இருந்தார்.

திமுகவில் சத்யராஜ் மகள்: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் நடிகர் சத்யராஜ் அவர்களின் மகள் திவ்யா சமீபத்தில் திமுக கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த உடனே விஜயை குறித்து மறைமுகமாக சில விஷயங்களை பேசி இருந்தார். இந்நிலையில் தற்போது தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் விஜய்யை நேரடியாக தாக்கி பேசி இருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'நடிகர் விஜய் இன்னும் மக்கள் பணி செய்ய தொடங்கவில்லை. 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு எந்தவித போட்டியையும் தமிழக வெற்றி கழகம் கட்சி கொடுக்காது. அரசியலை விடுங்கள் ஒரு சினிமா துறையை சேர்ந்தவளாக நான் தற்போது பேசுகின்றேன். விஜய் இதுவரை தன்னுடைய எந்த படங்களில் தமிழ் நடிகையை நடிக்க வைத்திருக்கிறார்.


பிரியா பவானி சங்கர், திவ்யா துரைசாமி என ஏராளமான நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் அவர் தன்னுடைய திரைப்படங்களில் ஒரு தமிழ் நடிகையை கூட நடிக்க வைக்கவில்லை. தன்னுடைய திரைப்படங்களில் எப்போதும் வடமாநில ஹீரோயின்களை தான் விஜய் அண்ணா நடிக்க வைப்பார். விஜய் அண்ணா உங்களுக்கு ஜோடியாக நடித்த தமிழ் நடிகைகளில் திரிஷா தவிர வேறு யாரு இருக்கா சொல்லுங்க? என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

Next Story