அஜீத் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து ரெடி... ஆனா அதுல ஒரு சிக்கல்!

by sankaran |
ajith
X

அல்டிமேட் ஸ்டார் நடித்த விடாமுயற்சி படத்தின் அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் தவம் கிடக்கிறாங்க. அதுக்காக அந்தப் படத்தோட டீசராவது வராதான்னும் காத்திருக்காங்க. தீபாவளிக்கு எதிர்பார்க்கலாம்னு சொல்லப்படுகிறது. இதுபற்றி வலைப்பேச்சு அந்தனன் சொல்வது இதுதான்.

மழை வேண்டி அங்கங்கே யாகம் நடத்துற மாதிரி விடாமுயற்சில இருந்து எதையாவது போடுங்கன்னு யாகம் நடத்துவாங்க போல இருக்கு. அப்படி ஒரு சூழல் போய்க்கிட்டு இருக்கு. ஆனா அவங்க அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்காங்க. விடாமுயற்சி டீசரை மட்டும் அழகாக் கட் பண்ணி வச்சிட்டாங்களாம். ரெடியா இருக்கு... என்கிறார்.

இதுகுறித்து படக்குழுவினர் சொல்வது இதுதானாம். நாங்க டீசர் எப்போ வரும்னு அறிவிக்கப் போறதுலாம் கிடையாது. திடீர்னு எப்போ தோணுதோ அப்போ போட்டு விட்டுருவோம். ஆனா நிச்சயமா தீபாவளிக்கு முன்னாடியோ இல்ல அடுத்த நாளோ நிச்சயமா தீபாவளி சர்ப்ரைஸா இருக்குமாம். ஆனா எப்போ வெளியிடப் போறாங்கன்னு தெரியாது என்கின்றனர்.

அதைக் கேட்டதும் வலைப்பேச்சு பிஸ்மி இதென்ன அநியாயமா இருக்கு? யாருக்குமே தெரியாமப் போட்டா அது கவனத்தைப் பெறாம போயிடாதான்னு கேட்கிறார். அதுக்கு அந்தனன் அங்க தான் அஜீத் நிக்கிறாரு. நள்ளிரவு 2 மணிக்குப் போட்டாக்கூட அதை எடுத்துக் கொண்டாடுவதற்கு ஒரு கூட்டம் இருக்கு என்கிறார். அதற்கு பிஸ்மி நக்கலாக சொல்கிறார். இப்போது டீசர் வெளியிடுறது எல்லாம் முக்கியமல்ல.

ஒரு மணி நேரத்தில் எத்தனை மில்லியன், 2 மணி நேரத்தில் எத்தனை மில்லியன்? அப்படிங்கற அந்த விஷயம் ஒண்ணு இருக்கு. அதுக்கு பெரிய பில்டப் கொடுப்பாங்க என்கிறார். அறிவிக்காம போடுறது தான் சூப்பர். அதனால எந்நேரமும் டுவிட்டரைப் பார்த்துக்கிட்டே இருங்க என்கிறார் அந்தனன்.

மேலும் இப்படி அறிவிக்காம வெளியிடுறது தான் பெரிய மனித உரிமை மீறல்னும் காமெடியாகச் சொல்கிறார். என்னோட கணிப்பு கண்டிப்பா பெரிய பில்டப்போட தான் வெளியிடுவாங்கன்னு நினைக்கிறேன்னு சொல்லி முடிக்கிறார் பிஸ்மி.

அஜீத் ரசிகர்களைப் பொருத்த வரை எது எப்படி போனாலும் பரவாயில்லை. எப்படி வந்தாலும் பரவாயில்லை. எங்களுக்கு தல படத்தோட டீசர் தான் தீபாவளி என்கிறார்கள். மகிழ்திருமேனியின் இயக்கத்தில் தல அஜீத்தின் விடாமுயற்சி தயாராகி வருகிறது. திரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். அஜீத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது.

Next Story