1. Home
  2. Cinema News

விஜய்க்கு வேட்டு வைக்க தயாரன சிவகார்த்திகேயன்.. பொங்கல் பந்தயத்தில் பெரிய உள்குத்து இருக்கு..

விஜய்க்கு வேட்டு வைக்க தயாரன சிவகார்த்திகேயன்.. பொங்கல் பந்தயத்தில் பெரிய உள்குத்து இருக்கு..

சினிமாவுக்கு நஷ்டம் :

விஜய் சினிமாவில் உச்சம் தொட்டு விட்டு தற்போது அரசியலில் பயணிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் ஹெச்.வினோத் இயக்கத்தில் ’ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இதுதான் தனது கடைசி படம் என்று விஜய் அறிவித்துள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரிக்கு விஜயால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னணி சினிமா பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். வருடத்திற்கு சுமார் 500 கோடி ரூபாய் விஜய்யால் இழப்பீடு ஏற்பட போகிறது என்றும் இதனால் சினிமா துறையை நம்பி இருக்கிற பலரும் நஷ்டத்தில் தள்ளப்பட போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

விஜய்க்கு எதிராக திட்டம் :

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் விஜய்யின் அரசியல் வருகையை கட்டம் கட்டி விமர்சித்து வருகிறார்கள். விஜயின் படத்தை எதிர்க்க திமுக புதிய திட்டத்தை போட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார் மேலும் அதில்,” ஆளுங்கட்சியான திமுக ஜனநாயகன் படம் பொங்கலுக்கு வெளியாக இருந்ததால் அதற்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தை கொண்டு வர திட்டமிடுகிறார்கள்”.

திமுக பக்கா பிளான் :

”ஜனநாயகன் படத்தைப் பொறுத்தவரை அது முழுக்க முழுக்க தெலுங்கு மசாலா படம். மசாலா படம் என்று சொல்வதைவிட ஒரு மலிவான மசாலா படத்தின் ரீமேக்தான் ஜனநாயகன். அதில் சமகால அரசியலை திணித்து ரீமேக் படமாக மாற்றி இருக்கிறார்கள். இந்த படம் விஜய்க்கு பாசிட்டிவாக இருந்தாலும் திமுகவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தும்”.

”அதற்கு பதிலடி கொடுக்க நினைத்து சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை 5 நாட்கள் கழித்து வெளியிட திட்டமிட்டு உள்ளார்கள். பொங்கலன்று இந்த படத்தை வெளியிட்டால் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்திய கதை. அன்று திமுக எப்படி எல்லாம் இருந்துச்சு தமிழ்நாட்டிற்காக எப்படி எல்லாம் ரத்தம் சிந்தினார்கள் என்று இந்த படத்தில் இருக்கும். ஜனநாயகன் படம் திமுக மீது அவதூறு பரப்பினாலும் அதற்கு பதில் சொல்லும் விதமாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் இருக்கும்”. என்று கூறியுள்ளார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.