மருத்துவர் கையைப் பிடித்துக்கொண்டு ரஜினி சொன்ன அந்த விஷயம்... கண்கலங்க வச்சிட்டாரே தலைவரு...!
உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மாலை சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி.
நேற்று காலை ரஜினிக்கு சிறிய அளவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான வதந்தியைக் கிளப்பினர். இதயத்தில் அடைப்பு என்றார்கள். சிறுநீரகக் கோளாறு என்றார்கள். ஆனால் நடந்தது வேறு.
அடிவயிற்றுப் பகுதியில் உள்ள ரத்தநாளத்தில் ஏற்பட்ட வீக்கத்தை சரிசெய்துள்ளார்கள். அதுவும் அறுவை சிகிச்சை இல்லாமல் என்பது தான் முக்கியமான விஷயம். இன்னும் இரு தினங்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார். அடுத்து 3 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.தொடர்ந்து ரஜினியைப் பார்த்த இருதயவியல் மருத்துவர் சொக்கலிங்கம் என்ன சொன்னாருன்னு பார்க்கலாம்.
ரஜினி சிகிச்சை முடிந்து நலமுடன் உள்ளார். அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்துள்ளார் மூத்த இருதயவியல் மருத்துவர் சொக்கலிங்கம். அவர் என்ன பேசினார் என்று பார்ப்போம்.
ரஜினிகாந்த் எனது 50 ஆண்டுகால நண்பர். இப்போ தான் பார்த்துக்கிட்டு வந்தேன். நன்றாக இருக்கிறார். நல்லா பேசிக்கிட்டு இருந்தார். 'என்னங்க ரஜினி உங்களைப் பத்தித் தான் எல்லாரும் டிவில பேசிக்கிட்டு இருக்காங்க.' 'என்னைப் பத்தி சொல்லுங்க.
அதனால மக்களுக்குப் பயனடைஞ்சா அதுவே மகிழ்ச்சி தானே'ன்னு சொன்னாரு. இன்னைக்கு காலைல தான் பண்ணினாங்க. நாளை ஒரு நாள் ரெஸ்ட் எடுப்பாரு. அதுக்கு மறுநாள் வீட்டுக்குப் போயிடுவாரு. அப்புறம் சில வாரங்கள் ரெஸ்ட் எடுப்பாரு. அதன்பிறகு முந்தி இருந்ததை விட ஆக்டிவா ஆகிட முடியும்.
உணர்வு, உணவு, உடற்பயிற்சி என்ற 3 உக்களைக் கடைபிடித்தால் போதும். இதைத் தான் ரஜினிக்கிட்டேயும் சொல்லிட்டு வந்தேன். இந்த 3 உக்களுக்கும் 3 மந்திரங்கள் சொல்றேன். எண்ணுகின்ற எண்ணம் சீராக, உண்ணுகின்ற உணவு சீராக, சீரான உடற்பயிற்சி என்ற 3 மந்திரங்களை நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.
ரஜினிகாந்த் திரும்பி வரப்போறாரு. நம்மை ஆக்டிவா வச்சிக்கப் போறாரு. வாழ்க்கை என்ற கோடு நம் கையில். நம்பிக்கையை, தன்னம்பிக்கையை மூடநம்பிக்கையற்று இந்த 3 மந்திரங்களைக் கடைபிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால் இது நடக்கும்.
கருவில் தோன்றி கல்லறையில் மறைவது நம்மிடம் இல்லை. இடையில் இருக்கும் வாழ்க்கையை 3 மந்திரங்களைக் கடைபிடிக்கும்போது அதைக் கூட்டிக்கொண்டே போகலாம். ரஜினிகாந்த் கடைபிடிச்சிக்கிட்டுத்தான் இருக்காரு.
தூக்கம் மட்டும் 7 மணி நேரம் வச்சிக்கணும். அவருக்கிட்ட சொல்லிட்டு வந்தேன். 'இதே மாதிரி நீங்க இருந்ததை விட ஆக்டிவா இருக்கப் போறீங்க. கவலைப்பட வேண்டாம். உங்க 100வது பிறந்தநாளை சொக்கலிங்கம் தலைமையில கொண்டாடுவீங்க பாருங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன். கையைப் புடிச்சிக்கிட்டு 'நீங்க எல்லாம் இருக்கீங்க... எனக்கு என்ன கவலை?'னு சொன்னாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.