சிறுநீரக கோளாறு!.. தொடையை கிழித்து ரஜினிக்கு அறுவை சிகிச்சை?!.. பரபர அப்டேட்!...
நடிகர் ரஜினி நேற்று நள்ளிரவு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரின் குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு ரஜினிக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது.
படப்பிடிப்பு தளத்தில் மயக்கம் போட்டு விழுந்த அவரை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்தார்கள். ரஜினியின் சிறுநீரகம் செயலிழந்ததால் அவருக்கு மாற்று சிறுநீரகமும் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. கிட்டத்தட்ட ஒரு மாதம் அங்கு சிகிச்சை பெற்று ரஜினி சென்னை திரும்பினார்.
அதன்பின் சில மாதங்கள் ஓய்வெடுத்துவிட்டு சினிமாவிலும் நடிக்க துவங்கினார். கடந்த சில வருடங்களாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பிலும் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனை காரணம் காட்டியே அரசியலுக்கு வருவதாக எடுத்த முடிவில் இருந்து பின் வாங்கினார்.
அண்ணாத்த படத்தில் நடித்துவிட்டு வேட்டையன் படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இப்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்தான் ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
வயிறு தொடர்பான செரிமான பிரச்சனை எனவும், ரத்தநாளத்தில் அடைப்பு உள்ளதா என இருதவியல் துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருதாகவும், இசிஜி, எக்கோ போன்ற சோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது. மேலும், தேவைப்படு பட்சத்தில் ஆஞ்சியோ சோதனையும் செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள் என செய்திகள் வெளியானது.
இந்நிலையில், ரஜினிக்கு சிறுநீரகம் அருகே பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் தொடையிலிருந்து சதையை எடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்திருப்பதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் மூத்த 3 மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை அவருக்கு செய்யப்போவதாகவும் சொல்லப்படுகிறது.