விஜய் வாய தொறந்தாலே பொய்தான்.. ஊர சுத்தி ஏமாத்திட்டு இருக்காரு.. வெளுத்து வாங்கிய பிரபலம்
தவெக தலைவர் விஜய் :
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்காக முனைப்போடு செயல்பட்டு வருகிறார். இதனால் இனி வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் தமிழ்நாடு முழுவதும் தனது தேர்தல் பரப்புரையை நடத்துகிறார்.
முதற்கட்டமாக திருச்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாகை எனத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் ஊர் ஊராக சுற்றி பொய்களை பரப்பி வருகிறார். தேவையானதை பேசாமல் தேவையற்ற தகவலை மக்களுக்கு சொல்லி அவர் நேரத்தை மட்டும் வீணாக்கினது போதாது என்று மற்றவர்களின் நேரத்தையும் வீணடித்து வருகிறார் என்று சினிமா விமர்சகர் பிரபல டாக்டர் காந்தராஜ் கூறியிருக்கிறார்.
விஜய் பேசிய பச்சை பொய்கள் :
மேலும் அதில்,” விஜய் போற இடங்களில் எல்லாம் திமுகவை விமர்சித்து பேசி வருகிறாரே தவிர அவர் இந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்று என்றாவது சொல்லி இருக்காரா? அவர் சொல்ற மதிரியே திமுக மோசமான கட்சி ஒளிச்சு கட்டியாச்சு, ஸ்டாலின் ஓடிட்டாரு உதயநிதி ஸ்டாலின் தற்கொலை பண்ணி செத்துப் போயிட்டாரு எல்லாம் முடிஞ்சு போச்சு, விஜய் வந்து தமிழ்நாட்டுக்கு என்ன செய்யப் போறீங்க ? அதை கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை”.
”நாகப்பட்டினத்தில் அவ்வளவு மீனவர்களை கூட்டினீர்களே அவர்களுக்கு ஒரு ரூபாய் செலவு செய்தீர்களா? இலங்கை கடற்படையால் பிடித்து சென்ற தமிழ்நாட்டு மீனவர்களுக்காக ஏதாவது நிதி உதவி செய்திருக்கிறாரா? ஆனால் படத்திற்கு 150 கோடி சம்பளம் வாங்கி பதுக்கிகொள்வார். திமுகவின் மருத்துவமனை ஊழல் பற்றி பேசுகிறார். இவர் நடித்த போக்கிரி திரைப்படத்தில் டாக்டரை கத்தியால் மிரட்டியவாறு நடித்திருப்பார். இதே போல இவரது ரசிகர் ஒருவர் மருத்துவமனையில் டாக்டரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டார்”.
”இதற்கெல்லாம் முன்னுதாரணம் விஜய் தான். அது மட்டும் இல்லை விஜயகாந்தும் ரமணா படத்தில் டாக்டர்களை தப்பாக காட்டினார். கடைசியில் அவரும் உடல்நிலை சரியில்லாத போது அவரைப் பார்த்தது ஒரு டாக்டர் தான். மெர்சல் படத்தில் எங்களை இழிவாக காட்டியதற்காக விஜயை மன்னிப்பு கேட்க வெச்சிருக்கணும் தப்பிச்சிட்டீங்க. அது மட்டும் இல்லை போற இடங்களில் எல்லாம் என்னை அவர் திட்டினார் இவர் திட்டினார் என்று இஷ்டத்துக்கு கதை கட்டி விடுகிறார்”.
அரசியலில் இருந்து விஜயை விரட்ட வேண்டும் :
”அவர் போற இடங்களில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்று அவரே சொல்கிறார். அதன் பிறகு அவரே அதை போட்டும் கொடுக்கிறார். விஜய்க்கு தன்னுடைய ரசிகர்களை கட்டுப்படுத்தும் சக்தி கிடையாது. அதனால் கண்டதையும் பேசிக்கிட்டு வாராரு. விஜய் அரசியலுக்கு வராமல் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். தயவுசெய்து அவர் அரசியல் விட்டு போக வேண்டும்”.
”தேர்தல் பரப்புரையில் இந்த கூட்டம் ஒட்டாக மாறுமா? என்று மக்களிடம் கேட்கிறார். அவர்களும் ஓட்டாக மாறும் என்று கோஷம் எழுப்புகின்றனர். இப்படி இருந்தால் எதற்கு தேர்தல்? எதற்கு தேர்தல் ஆணையம்? எல்லாவற்றையும் இழுத்து மூடி விட்டு விஜயை முதலமைச்சராக ஆக்க வேண்டியதுதானே”. என்று டாக்டர் காந்தராஜ் கிழிகிழி என்று கிழித்து தொங்க விட்டுவிட்டார்.
