Dude: ஜென் சி கிட்ஸால் காப்பாற்றப்பட்ட டியூட்.. மூன்று நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?

Dude: பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகி வசூல் வேட்டை நடத்தி இருப்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படம் மிகப்பெரிய வெறியை பெற்ற நிலையில் லவ் டுடே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். படம் தற்போதைய இளசு சமூகத்திடம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையும் நடத்தியது.
இதை தொடர்ந்து இந்த வருடத்தின் துவக்கத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் திரைப்படம் பொங்கல் ரிலீஸாக வெளியாகி மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் வெற்றியை பெற்றது. அதே சமயத்தில் வெளியான அஜித்தின் குட் பேட் அக்லியை துரத்தியது.
200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் எடுத்தால் ஓரளவு போட்ட பட்ஜெட்டை எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையை கொடுத்து இருந்தார். அதே நிலையில் இந்த முறை தீபாவளிக்கு டியூட், டீசல், பைசன் திரைப்படங்கள் ரேஸில் இருந்தது.
இதில் துருவ் பெரிய அளவு ஈர்க்க அவர் இன்னும் கணிசமான வெற்றியை கொடுக்கவில்லை. ஹரிஷ் கல்யாண் வெற்றி படங்களை கொடுத்தாலும் அவருக்கு இதை போன்ற விடுமுறை தினங்களுக்கு அவர் படம் இதுவரை வெளிவந்தது இல்லை.
இதனால் ரிலீஸுக்கு முன்னரே பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்துக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டது. ரசிகர்களும் டியூட் படத்திற்கே டிக்கெட் அதிகமாக புக் செய்தனர். இந்நிலையில் தீபாவளி ரிலீஸில் மிகப்பெரிய மாற்றம் நடந்தது.
துருவ் விக்ரமின் பைசன் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்த நிலையில் டியூட் பாதாளத்துக்கு சென்றது. பெரிய அளவில் வசூல் அடிப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜென் சி கிட்ஸ் டியூட் படத்தினை மொத்தமாக காப்பாற்றி விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் டியூட் படத்தின் மூன்று நாட்கள் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. இதுவரை 66 கோடி வசூலை இப்படம் குவித்துள்ளது. சின்ன பட்ஜெட்டில் இப்படம் குவித்திருக்கும் இந்த வசூலே பெரிய விஷயம்தான் எனக் கூறப்படுகிறது.