Connect with us
dude

Cinema News

Dude: பிரதீப் ரங்கநாதன் ரஜினி.. கயாடு லோஹர் ஸ்ரீதேவி!.. ஃபீல் பண்ணி பேசும் இயக்குனர்..

கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில் ஆட்டோ ஓட்டுனராகவும் நடித்திருந்தார். அதன்பின் இனிமேல் நான் இயக்கும் படங்களில் நானே ஹீரோ என முடிவெடுத்து அவருக்கென ஒரு கதையை உருவாக்கினார். அப்படி வெளிவந்த லவ் டுடே படம் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது.

10 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் 80 கோடி வரை வசூல் செய்தது. ஹீரோவாகவும் பிரதீப் வெற்றி பெற்றதால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் ஆகிய படங்களில் நடித்தார். இதில், டிராகன் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. LIK படம் இதுவரை வெளியாகவில்லை. இந்த படம் காதல் கலந்த ஃபேண்டசி படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தை தீபாவளிக்கு கொண்டு வரும் வேலையில் படக்குழு இறங்கியுள்ளது.

ஒருபக்கம் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் Dude என்கிற படத்திலும் பிரதீப் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். காதல் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ள ட்யூட் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. அதாவது இந்த தீபாவளிக்கு பிரதீப்பின் 2 படங்கள் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் ட்யூட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியானது. சிங்காரி என துவங்கும் இந்த பாடலை பிரதீப்பே பாடியிருந்தார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ட்யூட் பட இயக்குனர் கீர்த்தீஸ்வரன் ‘ட்யூட் படத்தின் கதையை எழுதும்போதே ரஜினி சாருக்கு 30 வயதிருந்தால் எப்படி இந்த கதையில் நடித்திருப்பார் என மனதில் நினைத்துதான் எழுதினேன். அதேபோல், மமிதா பைஜூ வந்தவுடன் ரஜினி – ஸ்ரீதேவி இணைந்து நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி படம் வந்திருக்கிறது’ என பேசியிருக்கிறார்.

Continue Reading

More in Cinema News

To Top