Dude Movie : அனைவரையும் கவர்ந்த டியூட் எக்ஸ்குளுசிவ் போட்டோஸ்

பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூ நடிப்பில் வெளியாக உள்ள டியூட் படத்தின் போட்டோஸ் தற்போது வெளியாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூ நடிப்பில் வெளியாக உள்ள டியூட் படத்தின் போட்டோஸ் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் தற்போது வேகமாக முன்னணி இடத்தை பிடித்துள்ளவர் பிரதீப். கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆன அவர் தற்போது பிஸியான ஹீரோவாக மாறிவிட்டார்.
லவ் டுடே, டிராகன் போன்ற படங்களின் வெற்றி இவரை முன்னணி இடத்திற்கு தள்ளியுள்ளது.
இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன், பிரேமலு படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த மமிதா பைஜூ நடிப்பில் டியூட் திரைப்படம் தீபாவளியையொட்டி நாளை வெளியாகிறது. டியூட் ரிலீஸாவதற்கு முன்பே 35 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது என கூறப்படுகிறது. மேலும் படத்தின் பட்ஜெட்டே 20லிருந்து 30 கோடி வரை மட்டுமே என்பதால் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில் டியூட் படத்தில் பிரத்யேக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த படங்களை பார்க்கையில் இது இளைஞர்களுக்கான ஜாலியான படமாக இருக்கும் எனத் தெரிகிறது.