1. Home
  2. Cinema News

Dude: ரிலீஸுக்கு முன்பே இவ்வளவு கோடி லாபமா?!.. பிரதீப் ரங்கநாதன் காட்டுல மழைதான்!...

dude
டியூட் படம் தொடர்பான அப்டேட்

Dude

தமிழ் சினிமா எப்போது யாரை தூக்கி பிடிக்கும். யாரை கீழே தள்ளிவிடும் என சொல்லவே முடியாது. திடீரென ஒரு புதுமுக நடிகர் வந்து ரசிகர்களிடம் பிரபலமாகி விடுவார்.. வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்கிற ஒரே படத்தில் மூலம் உச்சம் தொட்டவர் சிவகார்த்திகேயன். அதேபோல் என் ராசாவின் மனசிலே என்கிற ஒரே படத்தில் நடித்து உச்சம் தொட்டவர் ராஜ்கிரண். இப்படி நிறைய உதாரணங்களை சினிமாவில் சொல்ல முடியும்.

கோமாளி திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலம் நடிகராக மாறினார். குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்த வெளியான டிராகன் படமும் வசூலை அள்ளியது. இப்படி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்ததால் பிரதீப் ரங்கநாதனை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டார்கள்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK,  கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் Dude ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்திருக்கிறார் பிரதீப். இதில் Dude திரைப்படம் தீபாவளி விருந்தாக வருகிற 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. டிரெய்லரை பார்க்கும்போது இது ஒரு பக்கா குடும்ப பொழுதுபோக்கு காதல் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகி இருப்பது தெரிகிறது. தீபாவளி மூடுக்கு ஏற்ற படம் என்பதால் இந்த படம் ஹிட் அடிக்கும் என கணிக்கப்படுகிறது.

இந்நிலையில் Dude ரிலீஸாவதற்கு முன்பே 35 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. சினிமா உலகில் இதை Table Profit என சொல்வார்கள். அதற்கு முக்கிய காரணம் லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட் அடித்தும் பிரதீப் அதிக சம்பளம் கேட்காமல் Dude படத்தில் நடித்து கொடுத்திருக்கிறாராம். படத்தின் பட்ஜெட்டே 20-30 கோடி என்பதால் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுக்கும் என்கிறார்கள்.