Dude: சிவகார்த்திகேயனை தாண்டிய பிரதீப் ரங்கநாதன்!.. திடீர் தளபதிக்கு போட்டியா?!...

கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே, டிராகன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து தற்போது கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார்.கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து உருவான டியூட் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
தமிழ் கலாச்சாரத்தையே கடுமையாக விமர்சனம் செய்வது போல காட்சிகள் இருப்பதால் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை என்றாலும் Gen Z என சொல்லப்படும் இளைஞர்களை படம் கவர்ந்திருக்கிறது. டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இளசுகளின் கனவு கன்னியான மமிதா பைஜூ நடித்திருக்கிறார். அவரின் அப்பாவாக சரத்குமார் நடித்திருக்கிறார். சரத்குமார் கதாபாத்திரமும் ரசிகர்களை கவர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களில் டியூட் திரைப்படம் அதிக வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி மூன்று நாட்களில் இப்படம் 66 கோடி வசூல் செய்ததாக இப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நேற்று அறிவித்தது. இன்னும் இரண்டு நாட்களில் டியூட் திரைப்படம் 100 கோடி வசூலை தொடலாம் என கணிக்கப்படுகிறது.
லவ் டுடே, டிராகன், டியூட் என மூன்று தொடர் வெற்றிகளை கொடுத்து கோலிவுட் முக்கிய நடிகராக மாறி இருக்கிறார் பிரதீப்.விஜய் அரசியலுக்கு சென்று விட்ட நிலையில் அவரின் இடத்தை சிவகார்த்திகேயன் நிரப்புவார் என பலரும் பேசப்பட்ட நிலையில் பிரதீப் ரங்கநாதன் சிவகார்த்திகேயனை தாண்டி இருக்கிறார்.
அதாவது சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்து வெளியான மதராஸி திரைப்படம் மூன்று நாட்களில் 61 கோடி வசூல் செய்திருந்தது. அதேநேரம் டியூட் படம் மூன்று நாட்களில் அதைவிட 5 கோடி அதிகமாக அதாவது 66 கோடி வசூல் செய்திருக்கிறது. இது இரண்டையும் ஒப்பிட்டு பிரதீப் ரங்கநாதன் சிவகார்த்திகேயனை தாண்டி விட்டார் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.