Connect with us

Cinema News

இந்தியன் தாத்தாவால் அஜித்துக்கு வந்த சிக்கல்.. இப்பவோ, அப்பவோ என இழுப்பறியில் ‘விடாமுயற்சி’…!

இந்தியன் 2 திரைப்படத்தின் தோல்வியால் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்திற்கு சிக்கல் வரும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் பட்ஜெட் படமோ அல்லது சிறிய பட்ஜெட் படமோ படம் ரசிகர்களுக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே அந்த திரைப்படம் மிகச்சிறந்த வரவேற்பை கொடுக்கும்.  இல்லை என்றால் திரையரங்குகள் காற்று வாங்கிக் கொண்டுதான் இருக்கும். ரசிகர்களுக்கு அந்த படத்தின் பட்ஜெட்டை பற்றி எல்லாம் கவலை கிடையாது. அப்படத்தின் திரைக்கதைக்கு மட்டும்தான்  முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட நம்பிக்கை இருந்தது. அதற்கு காரணம் ஷங்கர் இயக்கிய இதன் முதல் பாகமான இந்தியன் திரைப்படம். அந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது.

அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என்று எடுத்து வைத்திருக்கிறார்கள். ஷங்கர் இயக்கம் என்றாலே அதில் ஒரு பிரம்மாண்டம் இருக்கும். அந்த பிரம்மாண்டம் இந்த திரைப்படத்தில் இல்லை என்பது தான் ரசிகர்களின் கருத்து. மேலும் கமலஹாசன் இந்த திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தாலும் கதை சிறப்பாக இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இயக்குனர் சங்கரின் சினிமா வாழ்க்கையிலேயே மிக மோசமான விமர்சனத்தை பெற்ற திரைப்படம் இந்தியன் 2 தான். இந்த திரைப்படத்தை நம்பி மிகப்பெரிய கோட்டையை கட்டி வைத்திருந்தது லைக்கா நிறுவனம். அந்த கோட்டை எல்லாம் தற்போது நொறுங்கிப் போய்விட்டது. இதற்கிடையில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்.

இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த திரைப்படத்தையும் லைக்கா நிறுவனம்தான் தயாரிக்கின்றது. ஏற்கனவே இப்படத்தின் பட்ஜெட் பிரச்சினை காரணமாக ஜவ்வு போல் படத்தை இழுத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியன் 2 மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்த லைக்கா நிறுவனம் அப்படம் சொதப்பிய காரணத்தினால், விடாமுயற்சி திரைப்படம் வருமா வராதா என்ற கவலை ரசிகர்களிடையே வந்து விட்டது.

விடாமுயற்சி இப்போ வரும், அப்போ வரும் என்று தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அஜித் அட போங்கப்பா.. என்று சொல்லிவிட்டு அடுத்த படத்திற்கு சென்றுவிட்டார். தற்போது வேட்டையன் மீதும் விடாமுயற்சி மீதும் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருக்கும் லைக்கா நிறுவனம் இப்படத்தில் ஏதாவது ஒரு படம் வெற்றி பெற்றால் போதும் தப்பித்துக் கொள்வார் சுபாஸ்கரன். ஆனால் விடாமுயற்சி எப்போது வெளியாகும் என்பதுதான் தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருக்கின்றது.

author avatar
ramya suresh
Continue Reading

More in Cinema News

To Top