தனுஷுடன் இணையும் சார்மிங் ஆக்டர்! புது கூட்டணி.. வில்லனா பார்த்தா நல்லாவா இருக்கும்?
தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக இட்லி கடை திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. சமீபகாலமாக தனுஷ் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆரம்பகாலங்களில் கிடைத்த கதைகளில் நடித்து குடும்ப ஆடியன்ஸிடம் வெறுப்பை சம்பாதித்து வந்தார்.
தனுஷ் படம் என்றாலே இப்படித்தான் இருக்கும். பார்க்க முடியாது என்ற பிம்பத்தினை உருவாக்கியிருந்தார். ஆனால் அதை சமீபகாலமாக அவருடைய படங்கள் உடைத்து வருகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பும் படமாக தனுஷின் படங்கள் அமைந்து வருகின்றன. இன்னொரு பக்கம் இயக்குனராகவும் அவரது படைப்பு பாராட்டை பெற்று வருகிறது.
இதுவரை நான்கு படங்களை இயக்கிய தனுஷ் ஒரு இயக்குனராகவும் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றுவிட்டார். ஒரு பன்முகக் கலைஞராக இந்த சினிமா உலகில் ஜொலித்து வருகிறார் தனுஷ். தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் தனுஷ் மாஸ் காட்டி வருகிறார். பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சினிமா, நடிப்பு இதில்தான் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில்தான் அவருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் விவாகரத்து ஏற்பட்டது. ஆனாலும் குழந்தைகள் விஷயத்தில் ஒரு அப்பாவாக தனுஷ் அவர் அவருடைய கடமையை செய்துவருகிறார். தற்போது தனுஷ் போர்த்தொழில் பட இயக்குனர் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. தற்போது வந்த தகவல் என்னவெனில் அந்தப் படத்தில் மலையாள நடிகர் ஒருவர் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது.

அவர் துல்கர் சல்மான் கூட இருக்கலாம் அல்லது மம்மூட்டியாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே மாரி 2 படத்தில் தனுஷுக்கு வில்லனாக மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடித்திருப்பார். அந்த வகையில் துல்கர் சல்மான் வில்லனாக நடிக்க வாய்ப்பிருக்கிறதா என்றும் ஒரு கேள்வி கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. துல்கர் சல்மானுக்கு தமிழில் குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. அப்படிப்பட்டவர் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்குமா என்ற கோணத்திலும் ஆலோசனை நடந்து வருகிறது.
