கிரேட் எஸ்கேப் ஆன துல்கர் சல்மான், ரவி மோகன்!.. தெரிஞ்சுதான் ஓடிப்போய்ட்டாங்களா!...

by MURUGAN |
கிரேட் எஸ்கேப் ஆன துல்கர் சல்மான், ரவி மோகன்!.. தெரிஞ்சுதான் ஓடிப்போய்ட்டாங்களா!...
X

Thug life review: இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருப்பவர் மணிரத்னம். பம்பாய், ரோஜா, நாயகன், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற இவர் இயக்கிய படங்கள் இந்திய அளவில் பேசப்பட்டது. பல வருடங்களாக இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனராக இவர் இருந்தார். இவரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

கமலை வைத்து இவர் இயக்கிய நாயகன் படம் இந்திய சினிமாவில் ஒரு முக்கிய படமாக் பார்க்கப்பட்டது. இந்த படத்திற்காக கமல் தேசிய விரும் வாங்கினார். நாயகனுக்கு பின் 37 வருடங்கள் கழித்து கமலும், மணிரத்னமும் இப்போது தக் லைப் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படம் நேற்று அதாவது ஜூன் 5ம் தேதி உலகமெங்கும் வெளியானது.

இந்த படத்திற்கு அதிக அளவில் புரமோஷனும் செய்யப்பட்டது. கமல், மணிரத்னம் ஆகியோர் பல ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்தார்கள். மேலும், சிம்பு, திரிஷா, அபிராமி போன்றவர்களும் பல புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள். எனவே, படத்திற்கு ஹைப் எகிறியது.


ஆனால், படம் வெளியாகி அதிக அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. கமல், சிம்பு நன்றாக நடித்திருந்தாலும் கதை, திரைக்கதை ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதனால் படத்தோடு ஒன்றவில்லை என பலரும் சொல்கிறார்கள். எல்லா நடிகர்களையும் மணிரத்னம் வீணடித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். மணிரத்னம் சொல்ல வந்த கதை ரசிகர்களுக்கு புரியவில்லை என சொல்லப்படுகிறது.

படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் நல்லாருக்கு எனவும் சொல்ல முடியாமல், நல்லா இல்லை எனவும் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள். மொத்தத்தில் ஒரு குழப்பமான மனநிலையில் வெளியே வருகிறார்கள். கண்டிப்பாக தக் லை படம் ஒரு தோல்விப்படமாக அமையும் என கணிக்கப்படுகிறது. இந்த படம் துவங்கியபோது கமலுடன் துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர்கள் இருவரும் படத்திலிருந்து விலகிவிட்டனர். அதனால்தான் சிம்புவை நடிக்க வைத்தார் மணிரத்னம்.

இந்த படத்தை விட்டுவிட்டு லக்கி பாஸ்கர் படத்தில் நடித்தார் துல்கர் சல்மான். அவருக்கு அது முக்கிய படமாக அமைந்து சூப்பர் ஹிட் அடித்தது. ஒருவேளை தக் லைப் படத்தில் நடித்திருந்தால் அசோக் செல்வன் ஏற்ற டம்மி கதாபாத்திரமே கிடைத்திருக்கும். நல்லவேளையாக அவர் தக் லை படத்திலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார் என சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Next Story