நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கமிட்டாகி இருக்கும் புறநானூறு திரைப்படத்தில் மற்றொரு பிரபல நடிகரும் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
தமிழ் சினிமாவில் இறுதிசுற்று என்ற திரைப்படத்தின் மூலமாக ஒரு பெண் இயக்குனராக அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் சுதா கொங்குரா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ஒரு உண்மை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது .
இப்படம் கொரோனா காலத்தில் ஓடிடி களத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட தேசிய விருதுகளும் கிடைத்தது. இதையடுத்து இந்த திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை அக்ஷய் குமாரை வைத்து எடுத்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
மேலும் தமிழ் சினிமாவில் மீண்டும் சூர்யாவை வைத்து புறநானூறு என்ற திரைப்படத்தை இயக்குவதற்கு திட்டமிட்டு இருந்தார் சுதா கொங்குரா. இப்படம் தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் வெளியானது. ஆனால் படப்பிடிப்பு தொடர்பான எந்த ஒரு அப்டேட்டும் கிடைக்கவில்லை .இந்த திரைப்படம் சற்று பெரிய படம் என்பதால் நடிகர் சூர்யாவுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இப்படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக சினிமா வட்டங்களில் தெரிவிக்கிறார்கள். ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கு இடையில் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்திருப்பதாக கூறப்பட்டது. சூர்யாவுக்கு பதிலாக சிவகார்த்திகேயனை வைத்து இந்த திரைப்படத்தை இயக்க சுதா கொங்குரா திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது.
முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவில் படத்தின் கதை சிவகார்த்திகேயனுக்கு மிகப் பிடித்துப்போன காரணத்தால் கட்டாயம் இப்படத்தில் நான் நடிக்கிறேன் என்று அவர் கூறிவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் தற்போது மற்றொரு பிரபலம் இணைந்திருக்கின்றார். அதாவது துல்கர் சல்மான் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த செய்தி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…