அங்க தான் நிக்கிறாரு சூரி... எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் பழசை மறக்கலயே!

by SANKARAN |
actor soori
X

நடிகர் சூரி 2009ல் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் அறிமுகம் ஆனார். பரோட்டா சூரியாக பெயர் வாங்கி ரசிகர்களைத் தன் பக்கம் திரும்ப வைத்தார். அந்;த பரோட்டா சாப்பிடும் போட்டியில் சூரி செய்த அசத்தலான காமெடியை இப்போது பார்த்தாலும் நாம் வயிறு வலிக்க சிரித்து விடுவோம்.

ஆனால் ஒரு கட்டத்தில் இங்கிலீஷைத் தப்புத் தப்பாகப் பேசும் காமெடியை செய்து வந்தார் சூரி. இது ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்குப் போர் அடித்து விட்டது. அந்த நேரத்தில் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக சூரி நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தில் அவரது முற்றிலும் மாறுபட்ட நடிப்பு அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது. தொடர்ந்து அவர் கருடன், கொட்டுக்காளி என பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

இப்போது மாமன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதாசிரியரும் இவர்தான். படம் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தில் சூரி கதாசிரியராகவும் அறிமுகம் ஆவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.


கலக்கப்போவது யாரு சீசனில் ஒரு காலத்தில் ஓகோன்னு கலக்கியவர் ஈரோடு மகேஷ். இவர் கலக்கிய சீசனில் தான் மதுரை முத்துவும் நான் ஸ்டாப் காமெடியை அள்ளித் தெளித்துக் கலக்கினார். இவர்கள் இருவருமே இப்போது ரொம்பவே பிரபலம் ஆகிவிட்டார்கள். அந்த வகையில் ஈரோடு மகேஷ் நடிகர் சூரி குறித்து ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.

நடிகர் சூரி சென்னையில கார்ல கால் மேல கால் போட்டுட்டு போறப்ப, இன்னமும் பெரிய பெரிய பில்டிங்கை எல்லாம் கிராஸ் பண்ணும்போது காலை எடுத்து கீழே போட்டு உட்கார்ந்துடுவேன்னு சொன்னார்.

ஏன் என்று கேட்டதற்கு அந்தக் கட்டிடம் கட்டும்போது ஒரு வேலையாளாக நான் வேலை செய்து இருக்கிறேன். அந்த கட்டடத்திற்கு கீழே இன்று நான் என்னுடைய BMW காரில் போறேன். காருக்குள்ள சூரி இருக்கலாம். ஆனால் என்னை வாழ வைத்த பில்டிங் முன்னாடி எப்படி கால் மேல கால் போட்டுட்டு உட்காருவது என்ற சொன்னார். அதுதான் சூரி என்கிறார் ஈரோடு மகேஷ்.

Next Story