Dhanush: இந்த மனுஷனுக்கு டிஏஜிங்கே தேவையில்லை.. 13 வருஷமா மாறாத தனுஷ்
பிறவிக்கலைஞன்:
தமிழ் சினிமாவில் ஒரு போற்றப்படும் நடிகராக திகழப்படுபவர் நடிகர் தனுஷ். இவருடைய அப்பா ஒரு இயக்குனர், அண்ணனும் ஒரு இயக்குனராக இருந்தாலும் தொடர்ந்து தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இன்று மாபெரும் அந்தஸ்தை சினிமாவில் பிடித்திருக்கிறார். திரையுலகில் பிறவிக் கலைஞன் என்று சொல்லப்படும் நடிகர்கள் சில பேர் இருக்கிறார்கள். அதில் தனுஷையும் நாம் சொல்லலாம்.
தனது தனித்துவமான நடிப்பால் மக்களிடையே தனக்கென தனி இடம் பிடித்தவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ், யார் வேண்டுமானாலும் நடிகனாக முடியுமா என்று கிண்டலாக கேட்கும் அளவுக்கு இவரை உருவ கேலி செய்தனர். அவரின் மெலிந்த உடல், இயல்பான தோற்றம் என ஹீரோவுக்கு உண்டான தகுதி இல்லாமல்தான் இருந்தது.
இவன்லாம் நடிகனா?:
ஆனால் அதே விமர்சனத்தை லட்சியமாக கொண்டு இன்று தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக உருவெடுத்திருக்கிறார். இவன்லாம் நடிகனா? என்று கேட்டவர்களுக்கு நடிகன் மட்டும் கிடையாது. திறமை இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிருபித்துக் காட்டியிருக்கிறார் தனுஷ்.
இவரை உலகளவில் பிரபலப்படுத்தியது ‘மூணு’ படத்தில் அமைந்த ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல்தான். அந்த பாடல் டிரெண்டாகி இவரை பெரியளவில் பிரபலமாக்கியது. இவருடைய கெரியரில் பேசும் படமாக மாறிய திரைப்படங்கள் என்னவெனில் ‘காதல் கொண்டேன்’, ‘ஆடுகளம்’, ‘அசுரன்’, ‘கர்ணன்’, ‘பொல்லாதவன்’ போன்ற திரைப்படங்களை குறிப்பிடலாம்.
இரண்டு முறை தேசிய விருதை பெற்றவர்.
- ஆடுகளம்
- அசுரன்
ரசிகர்களிடம் அக்கறை:
அதுமட்டுமில்லாமல் இந்திய திரையுலகில் மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். தமிழ் நாடு மட்டுமில்ல, இந்தியா முழுவதும் ஏன் ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவை பெருமை படுத்தியுள்ளார். தன் ரசிகர்களிடம் எப்போதும் அன்பாகவும் அக்கறையுடனும் இருக்கிறார். எந்தவொரு மேடையானாலும் தன் ரசிகர்களை நல்வழிப்படுத்தும் கருத்துக்களையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். சமூக நல செயல்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
இவருடைய நடிப்பில் அடுத்து வெளியாகக் கூடிய திரைப்படம் இட்லி கடை .இந்தப் படத்தை இவரே இயக்கி அதில் நாயகனாகவும் இருந்து வருகிறார். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் தனுஷ் மீசை இல்லாமல் மிகவும் இளமையாக இருப்பார். அதை பார்க்கும் போது மூணு படத்திலும் அதே மாதிரியான கெட்டப்பில்தான் நடித்திருப்பார். சமீபகாலமாக டீ ஏஜிங் என்ற தொழில் நுட்பம் இளைஞர்களை ஆட்டுவிக்கிறது.
வயதானவர்களை இளமையாக கொண்டுவரும் தொழில் நுட்பம்தான் அது. கோட் படத்தில் கூட விஜய்க்கு பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் தனுஷுக்கு அது தேவையே இல்லை. இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
