பனையூர் பாலிடிக்ஸ் தெறிக்க விடுதே... கேமராமேனுக்காக விஜய் செய்த தரமான சம்பவம்!
சினிமாவில் தற்போது பீக்கில் இருக்கும்போதே விஜய் தனது 69வது படத்தை முடித்த கையோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர அரசியலலில் காலடி எடுத்து வைக்கிறார். அந்த வகையில் தற்போது விஜயின் 69வது படத்தின் பெயரையும் 'ஜனநாயகன்' என்று அறிவித்து விட்டார்கள்.
எச்.வினோத் இயக்கும் இந்தப் படத்துக்கு இப்போது இருந்தே கடும் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, இன்னொரு பக்கம் விஜய் அரசியல் களத்திலும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். மாவட்ட செயலாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஏரியாவில் பரபரப்பு: தமிழக வெற்றிக் கழக கட்சியின் சார்பாக இன்று 4ம் கட்ட மாவட்ட செயலாளர்களை விஜய் அறிவிக்க உள்ளார். அதற்காக காலை முதலே அந்த ஏரியாவில் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. விஜய் தன் கட்சி அலுவலகத்துக்கு காரில் வந்து கொண்டு இருந்தார். அலுவலகம் அருகில் வரும்போது கேமராமேன்கள், பத்திரிகையாளர்கள் என காருக்கு குறுக்கும், நெடுக்குமாக ஓடி ஓடி படம் பிடித்துக் கொண்டு வந்தனர்.
விழுந்த கேமராமேன்: அப்போது ஒரு கேமராமேன் பின்னோக்கியே நடந்தபடி கேமராவை வைத்து விஜயின் காருக்கு முன்னால் படம் பிடித்துக் கொண்டு இருந்தார். திடீரென அவர் தடுமாறி கீழே விழுந்துவிட்டார். உடனே விஜய் காரில் இருந்து அவசரம் அவசரமாக இறங்கி வந்து அவரின் நலம் விசாரித்து 'பத்திரமாக பணியாற்றுங்க' என்று சொன்னாராம்.
நடந்தே சென்ற விஜய்: அதன்பிறகு தன் அலுவலகத்துக்கு கேமராமேன்கள், பத்திரிகையாளர்களின் நலன் கருதி நடந்தே சென்றாராம். இது ஒரு வகையில் சாதாரணமான விஷயமாகத் தெரிந்தாலும் இதுதான் மீடியாவில் பரபரப்பாக பேசப்படும். அரசியல்வாதிகள் என்றாலே கெத்தாக காரில் வந்து இறங்குவதைத்தான் நாம் பார்த்திருப்போம்.
இடையூறு வந்துவிடக்கூடாது: அந்த வகையில் ஒரு வளர்ந்து வரும் கட்சித்தலைவரும் பிரபல முன்னணி நடிகருமான விஜயின் இந்த செயல்பாடு அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த அளவு பிறரின் வலியை உணர்ந்து தன்னால் யாருக்கும் எந்தவிதத்திலும் இடையூறு வந்துவிடக்கூடாது என்று விஜய் பார்த்துப் பார்த்து செய்கிறார் என்றால் நிச்சயம் அவரது இலக்கை அடையாமல் விடமாட்டார் என்றே தெரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்த வீடியோவைக் காண: https://www.facebook.com/watch/?v=960829009449479