ஏ.ஆர் முருகதாஸ் படத்துக்கு இவ்வளவு எதிர்பார்ப்பா?.. எஸ்கே-வே ரொம்ப ஆர்வமா இருக்காராமே..

Actor Sivakarthikeyan: அமரன் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்திற்கு சென்று இருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்க தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார்.
அந்த வகையில் இவரது நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவரது நடிப்பில் கடைசியாக தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது. படம் பாக்ஸ் ஆபிஸில் 360 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் இந்த திரைப்படம் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி இருக்கும் நிலையில் பிப்ரவரி மாதம் இந்த திரைப்படத்திற்கு வெற்றி விழா கொண்டாட இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றது.
தற்போது இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அமரன் திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது. இந்த ஆண்டு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இந்த திரைப்படத்தின் வியாபாரம் எப்போது தொடங்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் தற்போது உயர்ந்திருக்கின்றது.
அமரன் திரைப்படத்திற்கு நல்ல ஒரு வசூல் கிடைத்துள்ள நிலையில் நிச்சயம் எஸ்கே 23 திரைப்படத்திற்கு வியாபாரம் பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. திரையரங்கு சாட்டிலைட் டிஜிட்டல் உரிமம் மற்றும் வினோகிஸ்தர் என்று படம் எவ்வளவுக்கு வியாபாரமாக இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வதற்கு தமிழ் சினிமாவில் இருக்கும் பலரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
ஏன் நடிகர் சிவகார்த்திகேயனே இப்படத்தின் வியாபாரத்தின் மீது மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகிறார். ஏனென்றால் அமரன் திரைப்படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்த திரைப்படத்தின் வியாபாரத்தை பொறுத்து மேலும் சம்பளம் தொடர்பாக முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.