Connect with us
madhampatty rangaraj

Cinema News

மாதம்பட்டியிடம் போலீஸ் துருவி துருவி விசாரித்து மேட்டரை எடுத்தாச்சு.. விரைவில் களி விருந்து கன்பார்ம்

ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு :

மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி ஆறு மாதம் கர்ப்பம் ஆக்கி அதன் பிறகு கோயிலில் டுபாக்கூர் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாய் இந்த விஷயத்தை பொது வெளியில் அம்பலப்படுத்தி ரங்கராஜ் முகத்திரையை கிழித்தார்.

அது மட்டும் இல்லாமல் காவல் நிலையத்திலும் அவர் மீது புகார் மனுவை கொடுத்தார். இந்நிலையில் காவல்துறையும் ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக படி சம்மன் அனுப்பியது. மாதம்பட்டி ரங்கராஜும் விசாரணைக்கு சென்றார். அங்கு தனது வாக்குமூலத்தையும் கொடுத்துள்ளார்.

மாட்டிக்கினாரு ரங்கராஜ் :

இந்நிலையில் இதைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு மேலும் தகவல்களை கூறியுள்ளார். அதில் ஜாயின் புகார் மனுவை ஏற்ற காவல் நிலையம் மாதம்பட்டி ரங்கராஜை விசாரணைக்கு அழைத்தது. ஜாய் கர்ப்பமான நிலையில் அதை கலைக்க இருவரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள். அங்கு அந்த குழந்தைக்கு தகப்பன் நான் தான் என்று மருத்துவமனை படிவத்தில் ரங்கராஜ் கையெழுத்து போட்டுள்ளார்”.

கைதாக வாய்ப்பு குறைவு :

”கோயில் திருமணமும் ஒரு ஆதாரம்தான். போலீஸ் விசாரணையில் தற்போது என்ன பிரச்சனை ஏன் பிரிந்தார்கள்? என்று விசாரிப்பார்கள். இந்த புகாரில் மாதம்பட்டி கைதாக வாய்ப்பு குறைவுதான் ஏனென்றால் அவர் ஏற்கனவே திருமணமானவர் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாக இருக்கிறார். இது தெரிந்தும் ஜாய் திருமணம் செய்திருக்கிறார்”.

”அதனால் இந்த புகார் வலுவான புகாராக இருக்காது. இதில் கைது செய்ய மாட்டார்கள். ஆனால் போலீஸ் மாதம்பட்டி மீது F.I.R போடலாம். மேற்கொண்டு நீதிமன்றத்தில் வாதாடி முடிவைப் பெற வேண்டும். அப்படி மாதம்பட்டி கைது செய்ய வேண்டும் என்றால் அவரின் மனைவி ஸ்ருதி தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் கொடுக்க வேண்டும்”.

”அதை போலீஸ் ஆதாரமாக எடுத்துக்கொண்டு மாதம்பட்டியை கைது செய்யலாம். ஸ்ருதியும் இன்னும் மாதம்பட்டி உடன் தான் இருக்கிறார் என்பதால் அதற்கு வாய்ப்பு குறைவு தான். மாறாக திருமணமான நபர் என்று தெரிந்தும் விளையாடியதால் ஜாய்யை கைது செய்யலாம். அப்படி நீதிமன்றத்திற்கு சென்றாலும் இந்த வழக்கு சட்டப்படி செல்லாது ஏனென்றால் இவர்களது இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது என்பதுதான்”.

பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை :

  • ”அதையும் மீறி வழக்கு தொடர்ந்தால் வருடக் கணக்கில் இழுத்துக் கொண்டு போகும். இந்த விஷயத்தில் அடிப்படையில் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த மாதிரியான கேசை பெண்கள் ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதேபோல் மாதம்பட்டி மாதிரி மோசடி செய்கிற நிறைய பேருக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்”.
  • ”ஜாய் கிரிசல்டா இதற்கு முந்தைய நேர்காணல் ஒன்றில் மாதம்பட்டிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் நிறைய கமெண்ட்ஸ்களை படிக்கும் போது என்னையும் இப்படித்தான் ஏமாத்திட்டார் என்று நிறைய வந்திருந்தது”.
  • ”ஜாய் மாதிரி இன்னும் பல பெண்கள் மாதம்பட்டி மீது புகார் கொடுத்தால் இந்த கேஸ் இன்னும் வலுவாக நிற்கும். நிச்சயமாக மாதம்பட்டி கைது செய்யும் வாய்ப்பு வரும். அப்படி வரும் பட்சத்தில் அவருக்கு ஜெயிலில் களி விருந்து உறுதி”. என்று இந்த வழக்கைப் பற்றி விவரித்துள்ளார்.
author avatar
SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top