மண்டமேல இருக்கிற கொண்டைய மறந்துட்டாரே வெற்றிமாறன்!.. விடுதலை 2-ல இத கவனிக்கலையா?..
விடுதலை திரைப்படம்: வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, மஞ்சு வாரியர், கௌதம் மேனன் ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது விடுதலை 2 திரைப்படம். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
அதற்கு காரணம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் தான். முதல் பாகத்தில் நடிகர் சூரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ஹீரோவாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் வெளியாகி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
இதனால் இரண்டாவது பாகத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அதனை விடுதலை 2 திரைப்படம் சிறப்பாக பூர்த்தி செய்து இருக்கின்றது. இருப்பினும் ஒரு சில ரசிகர்கள் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். அதாவது படத்தில் விஜய் சேதுபதியின் அரசியல் வசனங்கள் தொய்வை ஏற்படுத்துவதாக கூறி வருகிறார்கள்.
படத்தின் மிஸ்டேக்:
இந்த திரைப்படத்தில் ஒரு லாஜிக் மிஸ்டேக் ஏற்பட்டுள்ளது. அதாவது விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்தில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் கௌதம் மேனன் உடன் ஒரு போலீஸ் அதிகாரியாக வருவார். அவரே விடுதலை 2 திரைப்படத்தில் பண்ணையாறாக வருகின்றார். இது எப்படி சாத்தியம் இந்த மிஸ்டேக்கை எப்படி வெற்றிமாறன் கண்டுகொள்ளாமல் விட்டார் என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மிஸ்டேக்கு விளக்கம்:
படத்தில் ஏற்பட்ட இந்த லாஜிக் மிஸ்டேக்கு சமூக வலைதள பக்கங்களில் ஒருவர் விளக்கம் கொடுத்திருக்கின்றார். இது படத்தையே மிஞ்சும் அளவிற்கு இருக்கின்றது. அதாவது 'இரண்டாம் பாகத்தில் வர வேல்ராஜ் பண்ணையார் இருக்கிறார் இல்லையா அவருடைய பையன் தான் முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரியான வேல்ராஜ் பண்ணையார். தன்கிட்ட வேலை செய்த பெண்களில் ஒரு பெண்ணை பதம் பார்க்க, அந்தப் பெண்ணுக்கு பிறந்தது தான் போலீஸ் வேல்ராஜ்.
பண்ணையார் வேல்ராஜ், வேலைக்காரி முழுகாமல் இருக்க, சொத்தில் பெரிய பிரச்சினையாகும் என்று ஊரை விட்டு விரட்டிவிட்டார். போலீஸ் வேல்ராஜ் தனது அம்மா பண்ணையாரால் விரட்டியடிக்கப்பட்டு சென்னையில் வாழ்ந்து தன்னை வளர்த்த கதையை பிறகுதான் தெரிந்து கொள்கிறார். அதன் பிறகு தன்னுடைய அம்மா மூலம் தன் பிறந்த கதை கேட்ட போலீஸ் வேல்ராஜ்.
பண்ணையாரின் அடாவடித்தனங்களை எதிர்க்கவும், கொட்டத்தை அடக்கவும். இடதுசாரி மற்றும் திராவிடக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட போலீஸ் வேல்ராஜ் பண்ணையாரின் கூலித் தொழிலாளிகளிடம் காட்டும் வர்க்கபேதங்களை ஒடுக்கவும். சமூக நீதி காக்கவும், முதல் பாக போலீஸ் வேல்ராஜ் போலீஸ் வேலையில் சேர்ந்து சமூக நீதிக்காக அராஜகத்திற்கு எதிராக போராடினாலும் சிஸ்டம் அவருக்கு ஒத்துழைக்கவில்லை என்பதை லேட்டாக புரிந்து கொள்கிறார்.
ஆனாலும் முதல் பாக போலீஸ் வேல்ராஜ், தனது பண்ணையாரப்பாவை தனது அப்பா தான் அவர் என்று பொது வெளியில் சொல்லிக் கொள்ள அவருக்கு விருப்பமில்லை. இது எப்படி இருக்கு வெற்றிமாறனுக்காக முட்டுக் கொடுப்பர் சங்கம் - இங்கிலாந்து, டார்லிங்டன் கிளை என்று ஒரு சிறப்பான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்த பதிவானதை தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read: ஆதித்யா டிவி ஆதவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி!.. கண்கலங்கிய தருணம்!...