இது 6வது தடவ!. பெரிய லிஸ்ட்டே இருக்கு!.. ரஜினி ஓய்வை கலாய்க்கும் ஃபேன்ஸ்!..
Rajinikanth: ரஜினி 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் ரஜினி நடித்திருக்கிறார். இதில் ஒரு ஹாலிவுட படமும் அடக்கம்.தனக்கென ஒரு தனி ஸ்டைல், தனி உடல் மொழி ஆகியவை மூலம் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே ரஜினி உருவாக்கினார்.
அதுமட்டுமல்லாமல் வசூலை குவிக்கும் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் இப்போதும் இவரிடம் இருக்கிறது. அவருக்கு பின்னால் பல நடிகர்கள் வந்தாலும், விஜய் அஜித் போன்ற நடிகர்கள் வந்துவிட்டாலும் இப்போதும் அவர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். இந்நிலையில்தான் கமலுடன் இணைந்து ரஜினி நடிக்கவுள்ள திரைப்படத்தோடு ரஜினி சினிமாவுக்கு முழுக்கு போட முடிவெடுத்திருக்கிறார் என்கிற செய்தி சமீபத்தில் வெளியானது.
ஆனால் இதில் உண்மை இல்லை என்கிறார்கள் சிலர். ‘ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்கிற செய்தி வெளிவருவது இது முதல்முறை அல்ல. 2002ம் வருடம் முதல் இப்படி செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. பாபா, எந்திரன், கபாலி, காலா, தர்பார் ஆகிய படங்கள் வெளியான போதும் இதேபோல ‘இதுதான் ரஜினியின் கடைசி படம்’ என சொன்னார்கள். ஆனால், ரஜினி தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இப்போது கமலுடன் இணைந்து நடிக்கும் படத்தை சொல்கிறார்கள்’ என்கிறார்கள்.

சிலரோ ‘இதுதான் ரஜினியின் கடைசி படம் என செய்திகள் வெளிவந்தால் ரசிகர்கள் தியேட்டருக்கு படம் பார்க்க வருவார்கள். இதனால் நல்ல வசூல் வரும். அதனால் இதை ஒரு தந்திரமாகவே பயன்படுத்தி வருகிறார்கள்’ என சொல்கிறார்கள். இதை மறுக்கும் ரஜினி ரசிகர்கள் ‘அனுதாபத்தை உருவாக்கி அதன் மூலம்தான் வசூலை பெற வேண்டும் என்கிற நிலையில் ரஜினி இல்லை. அவர் இப்போதும் டாப் நடிகராகத்தான் இருக்கிறார். ரஜினியை பிடிக்காத விஜய் ரசிகர்கள் இதுபோன்ற செய்திகளை பரப்பி வருகிறார்கள்’ என்று சொல்கிறார்கள்
ஒருபக்கம் ரஜினி லைக்கா, சன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களை முடித்து விட்டார். அடுத்து ரெட் ஜெயண்ட் நிறுவனத்தையும் முடித்து விட்டால் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்று விடுவார்’ என கலாய்க்கிறார்கள். சிலரோ ‘தொடர்ந்து 3 படங்கள் ரஜினியை சம்பளம் இல்லாமல் நடிக்க வைத்தால் அவர் சினிமாவில் இருந்து விலகி விடுவார்’ என நக்கலடிக்கிறார்கள்.
உண்மையிலேயே சினிமாவிலிருந்து விலகுவது பற்றி அவர்தான் சொல்ல வேண்டும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது!..
