‘இந்தியன் 2’ படத்திற்கு வந்த சிக்கல்! எப்படி சமாளிக்கப் போறாங்கனு தெரியல..

இந்தியன் 2 படத்தைப் பொறுத்த வரைக்கும் கமல், சித்தார்த் ,எஸ் ஜே சூர்யா, சங்கர் இவர்கள் படு தீவிரமாக ப்ரோமோஷனில் இறங்கி இருக்கிறார்கள். ப்ரமோஷனுக்கு முன்பு வரை இந்தியன் 2 படத்தை பற்றி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் இவர்கள் செய்யும் பிரமோஷன் இப்போது இந்தியன் 2 படத்தின் நிலைமையே மாற்றி இருக்கிறது.

இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் சில சுவாரசியமான தகவல்களை இந்தியன் 2 படத்தை பற்றி கூறியிருக்கிறார். திரையுலகில் சம்பந்தப்பட்ட சில பேர் இந்தியன் 2 படத்தை பார்த்ததாகவும் அவர்களிடம் அந்தணன் படத்தை பற்றி கேட்டதாகவும் அதற்கு அவர்கள் இந்தியன் 2 படத்தை பெரிய அளவில் புகழ்ந்து பேசியதாகவும் கூறி இருக்கிறார்.

ரசிகர்களுக்கு பெரிய அளவில் ட்ரீட் வைக்கும் திரைப்படமாக இந்தியன் 2 படம் அமையப்போகிறது என்றும் கூறினார்களாம். ஒரு பக்கம் படத்தின் மைய கருத்து, கமலின் நடிப்பு இருந்தாலும் ஷங்கரின் பிரம்மாண்டம் என்பது எப்போதும் போலவே இந்த படத்தில் அதிக அளவு இருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறினார்களாம்.

அடிப்படையில் இந்தியன் 2 படமாக தான் வர வேண்டியது. ஆனால் படத்தை எடுக்கும் போது அதன் நீளம் கருதி எடிட்டில் கட் செய்யாமல் இந்தியன் 2, இந்தியன் 3 என இரண்டு பாகமாக இந்த படம் வந்திருக்கிறது .அதில் வருகிற 12-ம் தேதி இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது .

அதற்கு அடுத்தபடியாக இந்தியன் 3 படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தியன் 2 படத்தை பொருத்தவரைக்கும் சித்தார்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் அதிகமாக இருக்கும் என தெரிகிறது. இது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகவே இருக்கிறது என அந்தணன் கூறினார்.

ஏனெனில் படத்தைப் பற்றி வேறொரு எதிர்பார்ப்பில் ரசிகர்கள் வரும் பட்சத்தில் படம் முழுக்க சித்தார்த் பயணிப்பதாக இருந்தால் கொஞ்சம் ரசிகர்களுக்கு எரிச்சலை தான் வரவழைக்கும். இந்த மாதிரி ஒரு ஆபத்து தான் இந்தியன் 2 படத்தில் இருக்கிறது. இதை எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று தான் தெரியவில்லை.

அதற்கு ஏற்ப கதையை சுவாரசியமாக கொண்டு போனால் ஒழிய ரசிகர்களை திருப்தி படுத்த முடியும். ஆனால் இந்தியன் 3 இல் கமல், எஸ் ஜே சூர்யா ஆகிய இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகளவு அமையப் போகிறதாம். இவர்களின் ருத்ர தாண்டவமே இந்தியன் 3 படத்தில் தான் இருக்கிறதாம் .

இந்தியன் 2 படத்திலும் எஸ் ஜே சூர்யா கடைசி 20 நிமிடத்தில் மட்டுமே தான் வருவாராம். அதனால் எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டு படத்தின் கதையை மட்டுமே நம்பி இந்தியன் 2 படத்தை பார்க்கப் போவது தான் நல்லது என அந்தணன் கூறியிருக்கிறார்.

Related Articles

Next Story