Connect with us
surya

Cinema News

Idli Kadai Review: சூர்யாவோட நிலைமைய பார்த்தீங்கள! இட்லி கடையை ஓட ஓட விரட்டும் ரசிகர்கள்

Idli kadai Review:

தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இதற்கு முன் தனுஷ் பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியிருந்தாலும் இட்லி கடை திரைப்படம் மற்ற படங்களில் இருந்து சற்று வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது. ஒரு ஃபீல் குட் மூவியாகவே ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

படம் வெளியான முதல் நாளில் நேர்மறையான விமர்சனங்களைத்தான் படம் பெற்றது. இருந்தாலும் இன்னொரு தரப்பு ரசிகர்களிடமிருந்து படத்திற்கு நல்ல ஒரு ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. அதாவது வன்முறை, ஆக்‌ஷன் படங்களையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இட்லி கடை திரைப்படம் போர் என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் ஃபேமிலி ஆடியன்ஸ் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

நேற்று ஒரு நாளில் இந்தப் படம் இந்திய அளவில் வெறும் 10 கோடி அளவே வசூலை பெற்றதாக சொல்லப்படுகிறது. அதற்கு முக்கியக்காரணம் உலகம் முழுவதும் கரூரில் நடந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் கூட ரசிகர்கள் படத்தை தவிர்த்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் தொடர் விடுமுறை ,காலாண்டு விடுமுறை என மக்கள் சொந்த ஊருக்கு பயணப்பட்டிருப்பார்கள்.

இதனாலும் ரசிகர்கள் கூட்டம் குறைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தனுஷ் என்றாலே படம் இப்படித்தான் என நினைத்த மக்களுக்கு இந்த படம் ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும். சொந்த ஊரை மறக்க கூடாது, அப்பாவின் ஆசை, குல தொழிலை கைவிடக்கூடாது போன்றவற்றை ஆழமாக கூறியிருக்கிறார் தனுஷ். கிராமத்து மண்வாசனையில் அதுவும் இப்போதுள்ள தலைமுறையினருக்கு பிடித்த நடிகர் மூலமாக இப்படியொரு படம் எனும் போது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயமாகவே இந்தப் படத்தை பார்க்க வேண்டியிருக்கிறது.

படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராஜ்கிரண், சத்யராஜ், அருண்விஜய் என முக்கிய பிரபலங்களும் படத்தில் நடித்துள்ளனர். ஜிவியின் இசை எப்போதும் போலவே படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக இன்ப நிதிதான் வெளியிட்டிருக்கிறார். இதுதான் இப்போதுபெரும் பேசுபொருளாக பார்க்கப்படுகிறது.

படம் வெளியான இரண்டாவது நாள் அதாவது இன்று இட்லி கடை படத்திற்கு ரசிகர்களின் வருகை என்பது குறைவாகவேதான் இருக்கிறது. தியேட்டரில் ஈ ஆடுகிறது என்பது போல பல செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு காரணம் இன்ப நிதிதான் என்றும் சொல்லப்படுகிறது. சூர்யா திமுகவிற்கு ஆதரவாக இருந்தால்தான் அவரின் படம் என்ன ஆனது தெரியும்ல. அதே போல்தான் தனுஷ் சார். உங்க படத்திற்கும் இதே நிலைமைதான். இன்ப நிதி தயாரிப்பு. படத்தை ஓட விடமாட்டோம் என்று ரசிகர் ஒருவர் பகிரங்கமாக பகிர்ந்திருக்கிறார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top