Superstar: இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் யார்?!.. ரசிகர்கள் சொல்வது என்ன?..
சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்கிற பதவி எப்போதும் ஒரு நடிகருக்கு பெருமையான மற்றும் கௌரவமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்திய சினிமாவைப் பொறுத்தவரை சூப்பர்ஸ்டார் என்றால் எல்லோருக்கும் உடனடியாக ஞாபகம் வருவது நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே. ஏனெனில் கடந்த 35 வருடங்களுக்கு மேல் இந்த பட்டம் இவரிடம் மட்டுமே இருக்கிறது.
அதே நேரம் பல வருடங்களுக்கு முன்பு ஒரு சினிமா விழாவில் பேசிய ரஜினி ‘எந்த நடிகர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கிறாரோ.. எந்த நடிகரின் படங்கள் அதிக வசூலை பெறுகிறதோ அவர்தான் சூப்பர்ஸ்டார், இந்த சூப்பர்ஸ்டார் பட்டம் என்பது நிரந்தரம் இல்லை.. அது மாறிக்கொண்டே இருக்கும்’ என பேசி இருந்தார். ஆனாலும், அந்த படம் ரஜினியை விட்டு வேறு யாரிடமும் செல்லவில்லை.
ஆனால் நடிகர் விஜய் ஒரு கட்டத்தில் ரஜினியை ஓவர் டேக் செய்து அவரைவிட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். அதற்கு காரணம் விஜயின் சில படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து சிலர் ‘விஜய்தான் சூப்பர் ஸ்டார்’ என பேச துவங்கினார்கள். இதைத்தொடர்ந்து ஜெயிலர் விழாவில் ரஜினி காக்கா கழுகு கதையை சொல்ல விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் மோதிக் கொண்டார்கள். அந்த மோதல் இப்போது வரை தொடர்கிறது.

இந்நிலையில் ‘இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார்?’ என்கிற விவாதம் சமூக வலைதளங்களிங்களில் என்றான எக்ஸ் தளத்தில் இன்று துவங்கியது. அப்போது ‘விஜய்தான் சூப்பர்ஸ்டார்.. அவரின் கோட், லியோ பீஸ்ட் ஆகிய படங்கள் பல கோடி வசூல் செய்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்தும் கூலி படத்திற்கு எதிர்பார்த்த வசூல் இல்லை. எனவே விஜய்தான் சூப்பர் ஸ்டார்’ என விஜய் ரசிகர்கள் சொல்கிறார்கள்.
ரஜினி ரசிகர்களோ ‘இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் எப்போதும் ரஜினி ஒருவர் மட்டுமே. 1990களில் இருந்து ரஜினிகாந்த் இப்போது வரை பல நடிகர்களுக்கும் டஃப் கொடுத்து வருகிறார்’ என கூறுகிறார்கள். சிலரோ ‘இப்போது இந்தியாவின் சூப்பர்ஸ்டார் பிரபாஸ்தான். பாகுபலி 2-விற்கு பின் அவர் நடிக்கும் எல்லா படங்களும் அதிக பட்ஜெட்டுகளில் ஃபேன் இந்தியா படங்களாக வெளியாகிறது. அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் அவர் இருக்கிறார். எனவே அவர்தான் இந்தியாவின் சூப்பர் ஸ்டார்’ என கூறுகின்றனர். சிலரோ ‘ ஷாருக்கான்தான் அகில உலக சூப்பர்ஸ்டார். அவரின் படங்களுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் வரவேற்பு இருக்கிறது’ என்கிறார்கள்.

சிலரோ ‘கமல்ஹாசன்தான் ரியல் சூப்பர் ஸ்டார். 50 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இப்போதுதான் பிரபாஸ் போன்ற நடிகர்கள் பேன் இந்தியா நடிகர்களாக மாறியிருக்கிறார்கள். ஆனால் 80.90களிலேயே கமல்ஹாசனின் படங்கள் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியாகியிருக்கிறது’ என்கிறர்கள்.
ரசிகர்களின் கருத்துக்களை பார்க்கும் போது சூப்பர்ஸ்டார் என்கிற இடத்திற்கான போட்டி இப்போதுமே தொடர்ந்து நீடித்து வருவது புரிகிறது!...
