அது வேணாம் எஸ்.கே!.. அந்த நடிகர் நிலைமைதான் உனக்கும்!.. வார்னிங் கொடுக்கும் ஃபேன்ஸ்!...
டிவியில் ஆங்கராக வேலை செய்து திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து அப்படியே ஹீரோவாக நடிக்க துவங்கியவர்தான் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய இரண்டு படங்களின் வெற்றி சிவகார்த்திகேயனை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். பெரும்பாலும் காதல் கலந்த காமெடி படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் ஹீரோ, மாவீரன், வேலைக்காரன், அமரன் போன்ற சீரியசான படங்களிலும் நடிக்க துவங்கினார்.
இதில் அமரன் திரைப்படம் அவருக்கு மெகா ஹிட் படமாக அமைந்து 300 கோடி வரை வசூல் செய்தது. எனவே தனது சம்பளத்தை 70 கோடி வரை உயர்த்தினார் சிவகார்த்திகேயன். அதேநேரம் அடுத்து வந்த மதராஸி 100 கோடி வசூலை மட்டுமே பெற்றது. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோருடன் இணைந்து பராசக்தி என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
அடுத்து சிபி சக்கரவர்த்தி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இரண்டு பேரின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில்தான் சிவகார்த்திகேயன் மும்பை சென்று பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை சந்தித்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த சந்திப்பு பல மாதங்களுக்கு முன்பே நடந்திருக்கிறது. அல்லு அர்ஜுன், பிரபாஸ் போல நாமும் பேன் இண்டியா நடிகராக வேண்டும் என் ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன் சஞ்சய் லீலா பான்சாலியை பார்த்து ‘என்னை வைத்து ஒரு பேன் இண்டியா படமெடுங்கள் சார்’ என வாய்ப்பு கேட்டதாக சொல்லப்படுகிறது. அவரின் இயக்கத்தில் நடித்தால் தேசிய அளவில் கவனம் கிடைக்கும் என எஸ்.கே நினைக்கிறாரம்.

ஆனால் ரசிகர்களின் பார்வை வேறு மாதிரி இருக்கிறது. பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனோடு இணைந்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெளியான WAR 2 திரைப்படம் கடந்த ஆகஸ்டு மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. தெலுங்கிலும் இப்படம் ஓடவில்லை. RRR படம் மூலம் கிடைத்த பேன் இண்டியா நடிகர் என்கிற இடத்தை இந்த படம் மூலம் தவறவிட்டிருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.
வார் 2 படம் தோல்வி என்பதால் ஜூனியர் என்டிஆர் இனிமேல் ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். ஒரு நடிகர் பேன் இண்டியா நடிகராக மாறுவதற்கு ஹிந்தி மார்க்கெட் மிகவும் முக்கியம். ரஜினி, விஜய்க்கே அது நடக்கவில்லை. எனவே இதை உதாரணமாக காட்டி சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஒருவேளை சிவகார்த்திகேயன் நடித்து அந்த படம் பிளாப் ஆகிவிட்டால் சிவகார்த்திகேயனின் பேன் இண்டியா நடிகர் கனவு காலியாகிவிடும். எனவே, அவர் தமிழ் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது’ என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
