அழ வச்சிட்டாங்க!. ஊர் ஞாபகம் வந்துடுச்சி!.. மெய்யழகன் பார்த்து நெகிழும் ஃபேன்ஸ்!..

Meiyazhagan Review: 96 திரைப்படத்தை கொடுத்த பிரேம் குமார் இயக்கியுள்ள திரைப்படம்தான் மெய்யழகன். இந்த படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், இன்று இப்படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் திரையிடப்பட்டது. அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மனமுருகி பேசியிருக்கிறார்கள்.

படம் நன்றாக இருக்கிறது. நிறைய இடங்களில் அழது விட்டோம். நெகிழ்ச்சியான காட்சிகள் நிறைய இருக்கிறது. எனது சொந்த ஊர் தஞ்சாவூர். ஆனால், வேலை மற்றும் தொழில் காரணமாக சென்னையில் செட்டில் ஆனவர்களுக்கு இப்படம் சொந்த ஊரை நினைவுபடுத்தும் என ஒருவர் பேசினார்.

அதேபோல் ‘எனது ஊரில் 3 மணி நேரம் இருந்துவிட்டு வந்தது போல் இருக்கிறது. எல்லோரும் இப்படத்தை பார்க்க வேண்டும்’ என ஒரு பெண்மணி பேசினார். கார்த்தியின் நடிப்பு நன்றாக இருக்கிறது என பலரும், கார்த்தி - அரவிந்த்சாமி இருவரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது என சிலரும் சொல்லியிருக்கிறார்கள்.

meiyazhagan



‘படத்தின் நீளம் போரடிக்கிறதா?’ என கேட்ட கேள்விக்கு ‘அப்படி ஒன்றுமில்லை. படம் முழுக்க கார்த்தி பேசிக்கொண்டே இருக்கிறார். மற்றபடி படத்தில் லேக் இல்லை’ என ஒருவர் சொன்னார். ‘90 காலகட்டத்தில் உறவு முறைகள் எப்படி இருந்தது என இயக்குனர் காட்டியிருக்கிறார். உறவுகளின் முக்கியத்துவத்தை அழகாக காட்டி இருக்கிறார் இயக்குனர்’ என ஒருவர் புகழ்ந்து பேசினார்.

படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் நன்றாக நடித்திருக்கிறார்கள். பல செண்டிமெண்ட் காட்சிகள் இருக்கிறது. சிட்டியிலிருந்து வருபவர்களை கிராமத்தில் இருப்பவர்கள் எப்படி வரவேற்பார்கள் என காட்டியிருக்கிறார்கள். இந்த காலத்து இளைஞர்களுக்கு உறவு முறையின் முக்கியத்துவம் தெரியவில்லை. அதை கார்த்தி நினைவுப்படுத்துகிறார்.

‘படம் விறுவிறுப்பாக இல்லை என்றாலும் ரசிக்க வைக்கிறது. படத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது. நமக்குள் இருக்கும் எமோஷனல் உணர்வுகளை வெளிகொண்டு வருகிறார் இயக்குனர். நல்ல ஒரு ஃபீல் குட் மூவி’ என ஒரு இளம்பெண் சொல்லியிருக்கிறார். படத்தின் இறுதிக்காட்சி மனதை கணமாக்குகிறது. சிறுவயது நினைவுகளை இப்படம் நினைவுப்படுத்துகிறது. குழந்தைகளும் விரும்பி பார்க்கும் படம் இது. இரண்டாம் பாதியில் கார்த்தி பேசிக்கொண்டே இருப்பது தொய்வாக இருக்கிறது. அதை கொஞ்சம் எடிட் செய்தால் இன்னும் சிறப்பான படமாக வந்திருக்கும் என பெண் கூறினார்.

மொத்தத்தில் மெய்யழகன் படம் ஒரு ஃபீல் குட் படமாக வெளிவந்திருக்கிறது.


Related Articles
Next Story
Share it