பைக் ஓட்றது புளூமேட்ல!.. ஆனா பிஜிஎம் படா மாஸ்!.. விஜய் இப்படி வசமா சிக்கிட்டாரே!...

by Murugan |
vijay
X

விஜய்

Leo: சினிமா என்பதே இல்லாத ஒன்றை இருப்பது போல காட்டுவதுதான். 50 பேர் முன்னே இருந்தாலும் ஹீரோவால் அவர்களை துவம்சம் செய்ய முடியும். 100 பேர் துப்பாக்கியால் சுட்டாலும் ஹீரோ மேல் படாது. ஆனால், அவர் ஒவ்வொரு முறை சுடும்போது அடியாட்கள் கீழே விழுந்து கொண்டே இருப்பார்கள்.

எதையும் மிகைப்படுத்தி காட்டுவதுதான் சினிமா. ஒரு நடிகரை பல வழிகளிலும் ஹீரோவாக காட்டும் வேலையை சினிமா தொடர்ந்து செய்து வருகிறது. அதேநேரம், எதையும் உண்மையாக செய்து விடவும் முடியாது. ரசிகர்களை ஏமாற்றினால் மட்டுமே அங்கே ஒரு ஹீரோ ஜெயிப்பான்.

அது சினிமாவில் இலக்கணம். ஹீரோயிசம் என்பது எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இருக்கிறது. ஹீரோயிசம் செய்தால்தான் ஒரு நடிகரை ரசிகர்கள் ஹீரோக்களாக ஏற்றுக்கொள்வார்கள். அதனால்தான் இயக்குனர்கள் எல்லாம் செய்கிறார்கள். அதுவும் மாஸ் உள்ள ஆக்‌ஷன் ஹீரோக்கள் எனில் சொல்லவே தேவையில்லை.


சண்டை காட்சிகளில் அனல் பறக்கும். ஹீரோ மேலே இருந்து பறந்து வருவார். பைக் மற்றும் கார்களை 200 கிலோ மீட்டர் வேகத்தில் அசால்ட்டாக ஓட்டிக்கொண்டே பின்னால் வரும் வில்லனின் அடியாட்களை குறி தப்பாமல் துப்பாக்கியால் சுடுவார். ரசிகர்களை ஏமாற்ற பல வருடங்களாக ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை இயக்குனர்கள் பயன்படுத்துவது புளூ மற்றும் கிரீன் மேட் நுட்பம்தான்.

அதாவது, ஹீரோவின் பின்னால் பச்சை அல்லது நீல நிற துணி இருக்கும். ஹீரோ அதற்கு முன் நின்று சாகசம் செய்வார். அதன்பின் அந்த க்ரீன் மேட்டை நீக்கிவிட்டு ஹீரோ வேறு இடத்தில் இருப்பது போல மாற்ற முடியும். ஹாலிவுட்டில் பல வருடங்களாக இதை பின்பற்றி வருகிறார்கள்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்திலும் சில காட்சிகள் அப்படி எடுக்கப்பட்டது. விஜய் பைக் ஓட்டிக்கொண்டே துப்பாக்கியால் சுடுவார். அது புளூமேட்டில் எடுக்கப்பட்டது. இந்நிலையில், அந்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து ‘ பைக் ஓட்டுறது புளூமேட்ல.. ஆனா பிஜிஎம் படாமாஸ்’ என சிலர் கிண்டலடித்து வருகின்றனர்.

அதேசமயம், எல்லா ஹீரோக்களுமே இதை செய்து வருபவர்கள்தான் என்பது இங்கே சொல்லியாக வேண்டும்..

Next Story