அவரை அங்கே மதிக்க மாட்டாங்க.. கூலியில் நாகர்ஜுனா தேவையா?.. லோகேஷை புரட்டி எடுத்த கும்பல்
தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா, சௌபின் சாகிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
முன்னதாக இவரின் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதிலும் ’மோனிகா’ பாடல் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்பட்டு இணையதளங்களில் ரீல்ஸில் ட்ரெண்ட் செய்து கொண்டிருந்தனர்.
இதனால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியிருந்தது. அது மட்டுமல்ல இந்தப் படத்திற்காக இணைந்திருக்கும் கூட்டணி வலுவான கூட்டணி என்பதால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் புதிய உச்சமாக ஆயிரம் கோடி வசூலை எட்டும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதை கனவை பூர்த்தி செய்யும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது.
லோகேஷ், ரஜினியை கரெக்டாக பயன்படுத்தவில்லை என்றும், படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்ஸ் இருக்கிறது என்றும், சில கேரக்டர்கள் ஏன் வாரார்கள் போரார்கள்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த வகையில் கூலி படம் பார்த்து விட்டு மக்கள் எதற்காக நாகர்ஜுனாவை வில்லனாக போட்டார்கள் என தெரியவில்லை. உபேந்திரா, சௌபின் ஆகியவர்கள் நடிப்பு அருமையாக இருந்தது.
சௌபின் வில்லதனம் மாஸ் என்றும் நாகர்ஜுனாவை தெலுங்கு திரையுலகத்திலேயே யாரும் பான் இந்திய படங்களில் தேர்வு செய்ய மாட்டார்கள். குறிப்பாக பாகுபலி, புஷ்பா, புஷ்பா 2 ஆர் ஆர் ஆர் என என எந்த படங்களிலும் அவர் நடித்ததில்லை. தெலுங்கு திரையுலகம் அவரை ஆதரிக்கவில்லை அப்படி இருக்கும் போது கூலியில் மட்டும் எதற்காக அவரை லோகேஷ் பயன்படுத்தினார்? ஏன் இப்படி செய்தார்? இன்று கேள்வி கேட்டு லோகேஷை புரட்டி எடுத்து வருகின்றன.
படத்திற்கு என்னதான் நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் நாள் வசூல் நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன் படி உலகம் முழுவதும் கூலி சுமார் 151 கோடி வசூலித்துள்ளது என்றும் இது தமிழ் சினிமாவில் புதிய ரெக்கார்ட் என ரஜினி ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர்.
