என்னது கதையே இல்லாம படமா? இப்படி வித்தியாசமான முயற்சியில் வெளியான தமிழ் படங்கள்

pesumpadam
என்னது கதையே இல்லாம படமா? அப்படி என்ன படம் என்று தானே கேட்கிறீர்கள். இது மட்டுமல்ல தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான முயற்சியில் மேற்கொண்டு வெளியான படங்களை பற்றியும் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம். எந்த ஒரு பிரிவை எடுத்துக் கொண்டாலும் அதில் கமல் இல்லாமல் இருக்க மாட்டார். அப்படித்தான் இந்த வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்ட படத்திலும் கமலின் வருகை இருந்திருக்கிறது.
1987 ஆம் ஆண்டு சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பேசும் படம். இந்த படத்தில் கமல் மற்றும் அமலா நடித்திருந்தனர். மாடர்ன் சினிமாவில் வந்த முதல் வசனமே இல்லாத ஒரு முழு நீள திரைப்படமாக இந்த படம் அமைந்திருந்தது. அதோடு திரில்லர் ஜானரிலும் படத்தை எடுத்திருந்தார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்தபடியாக 1954 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பண்டரிபாய் நடிப்பில் வெளியான திரைப்படம் அந்த நாள்.
எஸ் பாலச்சந்தர் இயக்கிய இந்த படம் கருப்பு வெள்ளை படமாக வெளியானது. அந்த காலத்தில் கருப்பு வெள்ளை படம் என்றாலே பாடல்கள் ஏராளமாக இருக்கும். ஆனால் இந்த படத்தை பொருத்தவரைக்கும் பாடல்களே இல்லாமல் வெளியான முதல் படமாக இது அமைந்திருந்தது என்பது தான் முக்கியமான விஷயம். அடுத்து 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தாயம்.
சந்தோஷ் பிரதாப் நடிப்பில் வெளியான இந்த படம் ஒரே அறையில் எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தை இயக்கியவர் கண்ணன் ரங்கசாமி. பார்த்திபன் என்றாலே ஏதாவது ஒரு வித்தியாசமான முயற்சி. அப்படி 2014 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. எப்படி வசனம் இல்லாமல் கமல், படத்தில் நடித்தாரோ அதை போல கதையே இல்லாமல் ஒரு படத்தை இயக்கினார் பார்த்திபன். அதுதான் இந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் .

suyamvaram
இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். அடுத்ததாக ‘இருவர் மட்டும்’ என்ற திரைப்படம். 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் அபாய் மற்றும் சுனிதா ஷர்மா ஆகியோர் நடித்திருந்தனர். எந்த துணை நடிகர்களும் நடிகைகளும் இல்லாமல் இருவர் மட்டுமே நடித்த முதல் திரைப்படமாக இது அமைந்தது. அதன் பிறகு ஒருவரை மட்டுமே வைத்து எடுத்த படமாக ஒத்த செருப்பு திரைப்படம் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக 2010 ஆம் ஆண்டு அமுதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தமிழ்படம். மிர்ச்சி சிவா இந்த படத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவின் முதல் ஸ்பூஃப் படமாக இது அமைந்தது. ஒரு காமெடி ஜானரில் அமைந்த இந்த படம் இன்றுவரை ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக அமைந்திருக்கிறது. அடுத்ததாக மீண்டும் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இரவின் நிழல்.

iravin nizhal
முன் பின் முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாக இந்த படம் அமைந்தது. ஆசியாவிலேயே இதுதான் முதல் முறையாக நான் லீனியர் முறைப்படி எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்தது .இந்த வரிசையில் யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்காத திரைப்படம் சுயம்வரம். இந்த படத்திற்காக 14 முன்னணி இயக்குனர்கள் பணியாற்றி இருக்கிறார்கள் .நான்கு முன்னணி இசை அமைப்பாளர்கள் இசை அமைத்திருக்கிறார்கள். 14 முன்னணி ஹீரோ மற்றும் 12 முன்னணி ஹீரோயின்கள் என ஒரே நாளில் உருவான கின்னஸ் சாதனை படமாக இந்தப் படம் அமைந்தது.