அஜித்-திரிஷா காம்போல இத்தன படம் ரிலீஸ் ஆயிருக்கா?.. இதுல அந்த 3 படத்துல இருக்க ஒற்றுமை!..

by Ramya |
ajith
X

ajith 

நடிகர் அஜித்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். தற்போது தனது கைவசம் இரண்டு படங்களை வைத்திருக்கின்றார். விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இந்த இரண்டு திரைப்படங்களும் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்றது. இதில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருக்கின்றார். இவர்கள் இருவரும் நடிப்பில் ஏற்கனவே பல படங்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அந்த படங்களின் லிஸ்ட்டை தான் நாம் இதில் பார்க்க போகிறோம்.

ஜீ: இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து முதன் முதலாக நடித்த திரைப்படம் ஜி. கடந்த 205 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வி படமாக அமைந்தது. இருப்பினும் திரைப்படத்தில் அஜித் மற்றும் திரிஷா கூட்டணிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

கிரீடம்: இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு அஜித் மற்றும் திரிஷா கூட்டணியில் உருவான திரைப்படம் கிரீடம். இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய முதல் திரைப்படம் கிரீடம் திரைப்படம். வசூல் மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாக மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் அஜித் மற்றும் திரிஷாவின் ஜோடி பலராலும் ரசிக்கப்பட்டது. அதிலும் இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்களிடையே பிரபலமாக இருந்து வருகின்றது. இப்படத்தில் அஜித் மற்றும் திரிஷா ஜோடி இணைந்து இருக்க மாட்டார்கள்.


மங்காத்தா: இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மங்காத்தா. அஜித், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படத்தில் நடிகை திரிஷாவை அஜித் காதலித்து ஏமாற்றி விடுவார் கடைசியில் இருவரும் சேராமலேயே பிரிந்து விடுவார்கள்.

என்னை அறிந்தால்: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால். அஜித், த்ரிஷா, அனுஷ்கா செட்டி, அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இப்படத்தில் அஜித் மற்றும் திரிஷா காதலிப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் திரிஷாவின் கதாபாத்திரம் இறந்து விடுவது போல கதை அமைந்திருக்கும். இந்த திரைப்படத்திலும் இவர்கள் இருவரும் சேராமல் போய்விடுவார்கள்.

விடாமுயற்சி: என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்துடன் திரிஷா இணையும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி வருகின்றார். இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகின்றது. வரும் பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.


இப்படத்திலும் நடிகை திரிஷாவை கடத்திக் கொண்டு சென்று விடுவார்கள். அதனை கண்டுபிடிப்பதை மையமாக வைத்து தான் படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த படத்திலாவது அஜித்தும் திரிஷாவும் இணைவார்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பெரும்பாலாக நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்த நான்கு படங்களில் மூன்று படங்கள் அவர்கள் கிளைமாக்ஸில் சேர்வது போன்று இருக்காது. அதேபோல்தான் இப்படத்திலும் இருக்குமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Next Story