ரச்சிதா சொல்றது எல்லாமே பொய்.. ஷூட்டிங்கில் நடந்தது இதுதான்.. பயர் பட இயக்குனர் ஓபன்..!

by Ramya |
fire
X

Actress Rachitha: தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த பல நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள். நடிகை பிரியா பவானி சங்கர், வாணி போஜன் தொடங்கி தற்போது நடிகை ரச்சிதா மகாலட்சுமி-யும் வெள்ளி திரையில் அறிமுகமாகி இருக்கின்றார். பிரிவோம் சந்திப்போம் என்கிற சீரியல் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ரச்சிதா அதன் பிறகு சரவணன் மீனாட்சி என்கின்ற சீரியல் மூலமாக பிரபலமானார்.

இந்த சீரியலில் தொடர்ந்து பல சீசன்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் அது அனைத்திலும் ரச்சிதா தான் கதாநாயகியாக நடித்து வந்தார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ரச்சிதா தொடர்ந்து அதிக நாட்கள் நீடித்தார். ஆனால் பெரிய அளவுக்கு வரவேற்பு பெறவில்லை.

கதாநாயகியான ரச்சிதா : சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி நடித்து வந்தார். அந்த திரைப்படமும் பெரிய அளவுக்கு வரவேற்பை பெறவில்லை, அதன் பிறகு நடிகை ரச்சிதா இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் ஃபயர் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் பிக் பாஸ் பிரபலங்களான பாலாஜி முருகதாஸ், சாக்ஷி அகர்வால், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இயக்குனர் பேட்டி : ஃபயர் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி கிளாமராக நடிப்பது குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் சதீஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரச்சிதா குறித்து பேசி இருக்கின்றார்.


ஏனென்றால் சமீபத்தில் இந்த திரைப்படத்தில் நடித்த பாலாஜி முருகதாஸுக்கும் ரச்சிதாவுக்கும் இடையே சில பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் அது குறித்து பேசி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'நடிகை ரச்சிதா மற்றும் நடிகைகளை போல கிடையாது. பெயர் திரைப்படத்தின் சூட்டிங் ஒரு நாள் டோர் ஒன்று அவர் தலையில் விழுந்தது.

நாங்கள் அனைவரும் பதறி போடும் ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்று கூறினோம். ஆனால் இனிமேல் கொஞ்சம் பார்த்து வேலை செய்யுங்கள் என்று அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டு சென்று விட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரிடமும் கலகலப்பாக பேசுவார். அனைவருக்கும் சாப்பாடு பரிமாறுவது என எந்த ஈகோவும் இல்லாமல் மிக இயல்பாக இருந்து வந்தார்.

பாலாஜிக்கு இப்படத்தில் 5 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால் இடையில் அவர் பணத்தேவை என்று என்னிடம் கொஞ்சம் பணத்தை வாங்கி இருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகைகளில் ரச்சிதாவுக்கு தான் அதிகம் இம்பார்ட்டன்ஸ் கொடுக்கப்பட்டது. மேலும் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வீடியோ கிளிப்ஸை வெளியிட்டு இருந்தோம்.

அதாவது அவரை அப்படி இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்ற காரணத்தால் அப்படி ஒரு வீடியோவை வெளியிட்டோம். ஆனால் அது ரச்சிதாவுக்கு நெகட்டிவ்வாக தோன்றி இருக்கின்றது. இது குறித்து பலமுறை விளக்கம் அளித்தும் அவர் சமாதானமாகவில்லை. அதனால் நாங்கள் விட்டு விட்டோம் என்று பேசி இருக்கின்றார்.

Next Story