கூலி 1000 கோடி வசூலை அடிக்கும்!. தரமான சம்பவத்துக்கு லோகேஷ் லோடிங்!.. பி ரெடி ஃபேன்ஸ்!..

கூலி படத்தின் சிக்கிட்டு வைப் சாங் இணையதளங்களில் வெளியானதும் தீயாகப் பரவியது. ரசிகர்களைக் குதூகலிக்க வைத்தது. இப்போது இந்தப் படம் குறித்த அப்டேட்டுகளை மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தருகிறார். என்னன்னு பாருங்க.
1000 கோடி: லியோ படத்தை 1000 கோடி அடிக்கும்னு எதிர்பார்த்தாங்க. ஆனா அந்தப் படத்தோட செகண்ட் ஆப் அப்படி வாங்க விடாம ஆக்கிடுச்சு. அதுக்கு முக்கியமான காரணம் லோகேஷ் கனகராஜ். இப்ப அந்த 1000 கோடியை கூலி நிச்சயமாக அடிக்கும்னு சொல்றாங்க. ஏன்னா எப்பவுமே விட்டதைப் பிடிக்கணும்கற வெறி யாருக்குமே இருக்கும். அந்த வெறிதான் இப்ப இயக்குனர் லோகேஷூக்கு வந்துருக்கு.
ஆகஸ்ட் 10 ரிலீஸ்: வரும் தமிழ் புத்தாண்டு அன்று கிளிம்ப்ஸ் வீடியோ வர வாய்ப்புள்ளது. கூலி ரியல் பேன் இண்டியா படம். உபேந்திரா, நாகர்ஜூனா, அமீர்கான்னு பெரிய பெரிய ஜாம்பவான்கள் படத்தில் நடிச்சிருக்காங்க. ஆகஸ்ட் 10ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. ஜூலை மாதத்தில் இருந்து படத்தின் புரொமோஷன் தீவிரமாக இருக்கும்.
ஜெய்லர் 2: போஸ்ட் புரொடக்ஷனுக்கும் பக்காவா வேலை நடந்துருக்கு. அடுத்து தலைவர் ஜெய்லர் 2க்குப் போயிட்டாரு. லோகேஷைப் பொருத்தவரை போஸ்ட் புரொடக்ஷனுக்கு அதிக நேரம் எடுத்துக்குவாரு. குறிப்பா விஎப்எக்ஸ், சிஜி வேலைகளை எல்லாம் பிராமதமா கொண்டு வரணும்னு மெனக்கிடுவாரு. படையப்பா படத்துலயும் 12 மணிக்குத் தான் ரஜினிக்கு சூட்டிங் இருந்ததாம்.
ஆனால் காலைல 6 மணிக்கே வந்து மேக்கப் போட்டு ரெடியொ இருந்தாராம். அதுஏன் அவ்வளவு சீக்கிரமான்னு கேட்டா அதுதான் ரஜினி. அவரது குணமே அதுதான். 'எப்படி சார் இதெல்லாம்..?'னு கேட்டேன். பெரும் சிரிப்புடன் சிரித்தார் ரஜினி. 'நம்ம தொழில் நடிக்கிறது. அதுல நாம பக்தியா இருக்கணும்.
நோ பந்தா: நம்பிக்கையா உண்மையா இருந்தா அது எங்கேயோ கொண்டு போயிடும். இதுல வந்து பந்தா, திமிரை எல்லாம் காட்டக்கூடாது'ன்னு சொல்றாரு. இவர் இவ்ளோ பெரிய உயரத்துக்கும் இருப்பதற்குக் காரணம் இவர்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.