வந்துட்டாப்ல வந்துட்டாப்ல... தமிழ்சினிமா அடிக்கும் முதல் 1000 கோடி விஜய் படம்?!

வழக்கம்போல 1000 கோடி வசூல் சர்ச்சை இந்தப் படத்தையும் விட்டு வைக்கவில்லை. விஜயின் கடைசி படம் ஜனநாயகன் என்பதால் தான் இந்தப் பரபரப்பா என்று எண்ணத் தோன்றுகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ஜனநாயகன். வரும் பொங்கலையொட்டி ஜனவர் 9, 2026ல் ரிலீஸ் ஆகிறது.
தற்போது அரசியலில் இறங்கியுள்ளதால் இந்தப் படம் விஜய்க்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய அளவில் அவரது அரசியலுக்கு உறுதுணையாக அமையும் என்கிறார்கள். அந்த வகையிலும் அனைத்துத் தரப்பினரையும் இந்தப் படம் ஈர்க்கும் என்பதில் ஆச்சரியமில்லை. அதனால் இந்தப் படம் 1000 கோடி அடிக்குமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2000 கோடி அடிக்கும்னு கங்குவா படத்துக்குச் சொன்னாங்க. ஆனா அது பெரிய ட்ரோல் ஆகி விட்டது. இப்படி 1000 கோடின்னு ஜெய்லர் படத்துக்கும், பீஸ்ட் படத்துக்கும் சொன்னாங்க. அப்புறம் விடாமுயற்சி, குட்பேட் அக்லின்னு எந்தப் பெரிய நடிகர் படம் வந்தாலும் சொல்லத் தவறவில்லை நம்ம ரசிகர்கள். இப்போ கூலி அடிக்கும்னு சொல்றாங்க. இன்னொரு சாரார் தக் லைஃப் நிச்சயம் அடிக்கும்னு சொல்றாங்க.
ஆனா உண்மை நிலவரம் என்ன தெரியுமா? பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் இந்த 1000 கோடி சர்ச்சைக்கு விளக்கம் தருகிறார். வாங்க பார்க்கலாம்.
1000 கோடி அடிக்கும்னு நினைச்சி படம் எடுத்தா ஓடவே ஓடாது. கலெக்ஷனை டார்கெட்டா வச்சி ஒரு காட்சியை உருவாக்கவே முடியாது. ஒரு கதை போற போக்குல என்ன பண்றாங்களோ அதுதான் படம். இதன் நோக்கம் வெற்றிப்படமா இருக்கணும். 1000 கோடி அடிக்கணும், 786 கோடி அடிக்கணும் அப்படின்னுலாம் கணக்குப் பண்ணவே மாட்டாங்க. 1000 கோடியைத் தமிழ் சினிமா அடிக்கவே அடிக்காது.
நமக்கான வேல்யு என்னன்னு நாம முதல்லயே புரிஞ்சிக்கணும். ஒரு இந்திப்படத்துக்கு உள்ள வேல்யு தமிழ்ப்படத்துக்கு இருக்குமான்னா இருக்காது. இந்திப்படம் ஒரே நேரத்துல 5000 ஸ்கிரீன் ஓடும். தமிழ்ப்படம் ஓடுமா? அதிகபட்சம் 1000 ஸ்க்ரீன் ஓடும்? அப்படின்னா எப்படி 1000 கோடி அடிக்க முடியும்? இந்திப்படத்தோட கம்பேர் பண்ணுவீங்க. அதுக்கெல்லாம் வாய்ப்பு கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.