ஐஸ்வர்யாராய்க்கு பதில் நடிக்க இருந்த நடிகை! ஓட்டம் பிடித்த பிரசாந்த்.. ஏன் இவங்க கூட நடிக்க மாட்டாரா?

தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஒரு டாப் ஸ்டாராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். அஜித், விஜயையே பின்னுக்கு தள்ளி ஒரு டாப் நடிகராக வலம் வந்தார். பிரசாந்துடன் போட்டி போட்டு எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில்தான் விஜயும் அஜித்தும் இருந்தார்கள். அந்தளவுக்கு கோலிவுட்டின் கிங்காக வலம் வந்தார் பிரசாந்த்.

ஒரு சார்மிங் ஹீரோவாக லவ்வர் பாயாக பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகராக மாறினார். சிம்ரன், சினேகா, ஜோதிகா என கொடி கட்டி பறந்த நடிகைகளுக்கு ஜோடியாக நடித்தார் பிரசாந்த். எப்படி விஜய்க்கு சிம்ரன்தான் ஆன் ஸ்கிரீன் பேர் என சொல்கிறோமோ அதே போல் பிரசாந்துக்கும் ஒரு சிறந்த ஆன் ஸ்கிரீன் பேராக சிம்ரன்தான் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை பிரசாந்த் தவறவிட்டிருக்கிறார் என்ற ஒரு செய்தி அனைவருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் அந்தப் படத்தில் என்னதான் நடந்தது என்பதை பற்றி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியிருக்கிறார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரபுதேவா, பிரசாந்த், சௌந்தர்யா, மீனா போன்ற நடிகர்கள்தானாம்.

பிரபுதேவா சம்பளம் குறைவாக இருக்கிறது என்ற காரணத்தினால் படத்தில் இருந்து விலகினாராம். பிரசாந்த் நடிக்க ஒப்புக் கொண்டாலும் அந்த நேரத்தில்தான் ஜீன்ஸ் படம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதனால் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்தால் நன்றாக இருக்கும். பிரசாந்துக்கு ஐஸ்வர்யாராயை ஜோடியாக போடுங்கள் என்று கூறினாராம்.

ஆனால் படத்தின் கதைப்படி பிரசாந்துக்கு ஜோடி தபுதான். ஐஸ்வர்யா ராய் எல்லாம் முடியாது என சொல்லியிருக்கிறார்கள். இதனாலேயே பிரசாந்த் இந்தப் படத்தில் இருந்து விலகினாராம். அதன் பிறகே ஒட்டுமொத்த கூட்டணியும் கலைய அஜித், மம்மூட்டி, தபு, ஐஸ்வர்யா ராய் என உள்ளே நுழைந்திருக்கிறார்கள். பிரசாந்துக்கு பதில் அஜித் என அந்த நேரத்தில் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டதாம்.

மேலும் அஜித்தின் கெரியரில் இந்தப் படம் பெரிய மாஸ்டர் பீஸ் படமாகவும் அமைந்திருக்கிறது. ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் படம் பெரிய அளவில் வெற்றிப் பெற்றது. சங்கர் மகாதேவன் குரலில் அமைந்த சந்தன தென்றலே பாடல் காலம்முழுவதும் நின்னு பேசும் பாடலாகவே அமைந்து போனது.

Related Articles

Next Story