Connect with us

Cinema News

வள்ளி பட ஹீரோ ஞாபகம் இருக்கா? இந்த சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டாரின் அண்ணனா?

வள்ளி திரைப்படம்:

1993 ஆம் ஆண்டு ரஜினி தயாரிப்பில் வெளியான திரைப்படம் வள்ளி. முற்றிலும் புதுமுக நடிகர்களால் நடித்து வெளியான இந்த படம் வசூலில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இது ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் இருவரும் எழுதி தயாரிக்கப்பட்டது.

இதில் ஹீரோவாக நடித்த சஞ்சய் அறிமுக கதாநாயகனாக இந்த படத்தில் நடித்திருந்தார். படத்திற்கு இசை இளையராஜா. இந்த படத்தில் என்னுள்ளே என்னுள்ளே பாடல் இளையராஜாவின் ஆயிரம் பாடல்களில் டாப் 10 பாடல்களில் ஒன்றாக திகழும் ஒரு பாடல்.

அந்த அளவுக்கு இந்த பாடல் மிகுந்த வரவேற்பை இன்று வரை பெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் அறிமுகமான நாயகன் சஞ்சய் தமிழில் பல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார்.

ஆனால் தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர். விஜயகாந்த் நடித்த சேதுபதி ஐபிஎஸ் படத்தில் விஜயகாந்துக்கு தம்பியாகவும் நடித்திருக்கிறார். இப்போது இவரை படங்களில் பார்க்க முடிவதில்லை.

ரஜினி படம் மிஸ்ஸானது:

சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டுமல்ல ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகியின் கன்னட படத்தில் வினித்துக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தவர் இந்த சஞ்சய் தானாம் .வாசு இவரை பலமுறை இந்த ரோலுக்கு அனுகி இருக்கிறார்.

ஆனால் அப்போது சஞ்சய் மலையாளத்தில் ஒரு சீரியலில் பிஸியாக இருந்தாராம். கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தாராம். அதனால் அதை விட்டுவிட்டு இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என கூறினார் சஞ்சய்.

இருந்தாலும் அந்த படம் பார்க்கும் போதெல்லாம் இதில் நடித்திருந்தால் நல்ல ஒரு பெயர் கிடைத்திருக்குமே என பலமுறை நினைத்ததுண்டு என கூறி இருக்கிறார். அது மட்டுமல்ல தெலுங்கில் ஒரு பழக்கம் இருக்கிறதாம். புது முக நடிகர்கள் விழா என ஒன்று வைப்பார்களாம்.

நானும் அஜித்தும்:

அதன் மூலம் ரேவதி தலைமையில் பல புதுமுக நடிகர் நடிகைகளை தேர்வு செய்யும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. அப்படி ஒரு சமயம் அஜித்தும் சஞ்சயும் ஒரே நேரத்தில் அதில் கலந்து கொண்டிருக்கின்றனர்.இந்த நிலையில் இந்த சஞ்சய் பிரபல சீரியல் நடிகையின் அண்ணன் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

அவர் வேறு யாருமில்லை. மெட்டிஒலி சீரியலில் லீடு ரோலில் நடித்த காயத்ரி தான். அந்த காயத்ரியின் அண்ணன் தான் இந்த சஞ்சய். 90களில் வெளிவந்த சீரியல்களில் மிகவும் பிரபலமானவர் காயத்ரி. எந்த சீரியல்களை எடுத்தாலும் அதில் லீடு ரோலில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.

90கள் காலத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று சின்னத்திரையில் இவரை அழைப்பதுண்டு. தற்போது அம்மா கேரக்டரிலும் குணச்சித்திர கேரக்டரிலும் நடித்து வருகிறார் காயத்ரி.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top