1. Home
  2. Cinema News

விஜயகாந்துக்கும் ராவுத்தருக்கும் இதுதான் பிரச்சினையா? காமெடி நடிகர் சொன்ன தகவல்


தமிழ் சினிமாவில் மிகவும் போற்றத்தக்க நடிகராக இருந்தவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த். சமீபத்தில் தான் அவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. அவருடைய நினைவு நாள் அன்று விஜயகாந்தின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் என அவருடைய சமாதிக்கு வந்து மரியாதை செலுத்தி விட்டு சென்றனர். பல அரசியல் தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி விட்டு சென்றனர்.

எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு பெற்ற நடிகராக இருந்தவர் விஜயகாந்த். ஆனால் அது அரசியலில் அவருக்கு உதவவில்லை. ஏதோ ஒரு காரணத்தால் அரசியலில் அவரால் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை. இந்த நிலையில் விஜயகாந்தை பற்றிய ஒரு கேள்வி நீண்ட வருடங்களாக அனைவருக்கும் இருப்பது என்னவென்றால் நட்பிற்கு அடையாளமாக தமிழ் திரையுலகில் இருந்தவர்கள் விஜயகாந்தும் ராவுத்தரும்.

அப்படி இருந்தவர்களுக்கு இடையே என்னதான் பிரச்சனை நடந்தது என்பது இதுவரை யாருக்குமே தெரியாத ஒரு புதிராக இருக்கின்றது. இவர்கள் பிரிவுக்கு பிரேமலதா தான் காரணம் என பல பேர் கூறி வருகின்றனர் .இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இவர்கள் இருவரின் பிரிவுக்கு பிரேமலதா விஜயகாந்த் காரணம் என்பது உண்மை அல்ல.

அந்த நேரத்தில் அவர்களின் குழந்தைகளால் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சினையால்தான் ராவுத்தரும் விஜயகாந்தும் பேசிக்கொள்ளவில்லை என ஒரு பேச்சு அடிபட்டது. அவ்வளவுதானே தவிர இதற்கு பிரேமலதா விஜயகாந்த் எக்காரணத்தைக் கொண்டும் காரணம் கிடையாது என கூறினார் .மேலும் ஒரு மேடையில் விஜயகாந்த் பேசும் போது எனக்கு கிடைத்த மனைவி மாதிரி யாருக்கும் இல்லை என்பதைப் போல பிரேமலதா விஜயகாந்தை பற்றி மிகப் பெருமையாக பேசினார். அப்படிப்பட்டவர் எட்டு வருடங்களாக விஜயகாந்தை ஒரு குழந்தை போல கவனித்து கொண்டார் பிரேமலதா என சாரப்பாம்பு சுப்புராஜ் கூறியிருக்கிறார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.