ஃப்ரெண்ட்ஸ் பட அபிநயஸ்ரீயை ஞாபகமிருக்கா?.. அதிரடியா 10 கிலோ வெயிட் லாஸ் எப்படி பண்ணாரு தெரியுமா?

சமூகத்தில் பலரும் உடல் எடையை குறைக்க சர்ஜரி, ஒர்க்கவுட், டயட் என்று சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் நடிகை அபிநயஸ்ரீ சுலபமாக 6 மாதங்களில் 10 கிலோ வரை எடையை குறைத்துள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
பிரபல இந்திய நடிகை அனுராதாவின் மகளான அபிநயஸ்ரீ நடிகர் விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான ஃப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்யின் ஒருதலை காதல் கதாபாத்திரமாக நடித்து அறிமுகமானார். அதை தொடர்ந்து ஆர்யா என்ற தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து "ஆ அண்டே அமலாபுரம்" என்ற பாடலுக்கு நடனமாடி பெரும் வரவேற்பை பெற்றார். பின்னர் ஹங்காமா, பைசலோ பரமாத்மா, ஒன் டூ திரி, இயற்கை போன்ற பல படங்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பட வாப்புகளை இழந்த அபிநயஸ்ரீ முக்கியமாக துணை வேடங்கள் மற்றும் சிறப்பு நடனக் காட்சிகளில் புகழ்பெற்று வருகிறார். கடந்த மாதம் லியோ திரைப்படத்தில் ’நான் ரெடி தான்’ பாடலுக்கு குழு நடனமாடிய 100-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என்று நடன இயக்குனர் தினேஷ் மீது குற்றச்சாட்டிற்கு ஆதரவு தெரிவித்து பேசியிருந்தார்.
அபிநயஸ்ரீ அண்மையில் அளித்த பேட்டியில் தான் ஜிம்மிற்கு சென்ற உடன் கண்ணாடி பார்ப்பது வழக்கம், பொதுவாக ஜிம்மில் இருக்கும் கண்ணாடி நாம் இருப்பதை விட எடை அதிகமாக இருப்பதுப்போல் தான் காட்டும் அதை பார்த்தால் தான் நாம் இன்னும் ஒர்க்கவுட் அதிகம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும். 6 மாதத்தில் 10கிலோ வரை எடை குறைத்துள்ளேன். ஜிம் போய் டயட் ஃபலோ பண்ணனும். அதிலும் முக்கியமான ஒன்று தூக்கம், நல்லா துங்குனா தான் உடம்பு நல்லா குறையும்.
வெள்ளை சர்க்கரை, கூல் ட்ரிங்க்ஸ், ஃபாஸ்ட் ஃபூட் போன்றவற்றை நிறுத்தினாலே அதிகமான எடை குறையும் அது ஒரு ஸ்லோ பாய்சன் மாதிரி அதை தவிர்ப்பது நல்லது. குலுக்காண்டி ஆரஞ்சு, கோதுமை, வேகவைத்த முட்டை, சிக்கன் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். உதடு, கன்னம் எல்லாம் பெருசு பண்றது, மூக்க சர்ஜரி பண்றது, அதெல்லாம் அவங்க அவங்க விருப்பம் எனக்கு இந்த ஜென்மத்துக்கு இது தான், இதுவே போதும் என பேசியுள்ளார்.