மீண்டும் வருகிறார் நேசமணி....ரீ ரிலிஸ் ஆகும் பிரண்ட்ஸ்

சூப்பர் ஹிட் ஆன பிரண்ட்ஸ் திரைப்படம் மீண்டும் ரீ ரிலிஸ் ஆகிறது.
தமிழ் திரையுலகிற்கு இது ரீ ரிலிஸ் காலம்போல. அப்போது ஹிட் ஆன படங்கள் மீண்டும் தூசி தட்டி ரீ ரிலிஸ் செய்துகொண்டிருக்கிறார்கள். அவற்றில் சில படங்கள் நல்ல வசூலையும் கொடுக்கின்றன. விஜய் நடிப்பிலொ ரீ ரிலிஸான கில்லி கிட்டத்தட்ட ரூ.50 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
அதேபோன்று சமீபத்தில் வெளியான விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படமும் கிட்டத்தட்ட ரூ.35 கோடி வரை வசூல் செய்தது. இதனால் பல படங்கள் இனி வரும் காலங்களில் ரீ ரிலிஸ் அக வரிசை கட்டி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் விஜய், சூர்யா, வடிவேலு,தேவயாணி நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான படம் பிரண்ட்ஸ். மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் வெளிவந்த இப்பட்ம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த வெற்றிக்கு வடிவேலு காமெடியும் ஒரு முக்கிய பங்கினை பெற்றது. இப்படம் வருகிற நவம்பர் 21ம் தேதி மீண்டும் ரிலிஸ் செய்யப்படுகிறது. இப்பொதுள்ள தலைமுறையினர் இப்படத்தினை எப்படி ரசிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.