அஜித் கார் ரேஸ்ல கலந்துக்குறாருனு தெரியும்!.. ஆனா அது என்ன மாதிரி ரேஸ்ன்னு தெரியுமா?..

by Ramya |
ajith car race
X

Actor Ajith: தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். சினிமா மீது எவ்வளவு காதல் இருக்கின்றதோ அதே அளவுக்கு கார் மற்றும் பைக் ரேசிங் மீது அலாதி பிரியம் கொண்டவர் நடிகர் அஜித். இது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவ்வபோது பைக்கை எடுத்துக் கொண்டு ட்ரிப் சென்றுவிடுவார்.

அந்த வகையில் தற்போது கார் ரேசிங்கில் கலந்து கொள்ள இருக்கும் அஜித் தனது கையில் இருந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு தற்போது துபாய் கிளம்பிவிட்டார். துபாயில் ஜனவரி 10ஆம் தேதி முதல் 24 மணி நேர கார் ரேஸ் பந்தயமான 24H Series Dubai 2025இல் கலந்து கலந்து கொள்கின்றார்.

பலருக்கும் நடிகர் அஜித் கார்பந்தயத்தில் கலந்து கொள்ளப் போகின்றார் என்கின்ற தகவல் தெரியும். ஆனால் அது எது மாதிரியான கார் பந்தயம் என்பது தொடர்பான தகவல் பலருக்கும் தெரியாது. அது குறித்து தான் நாம் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

24H Series Dubai 2025: கார் பந்தயம் என்று கூறியவுடன் ஏதோ வழக்கமாக ஒரு சர்க்யூட்டுக்குள் 10 லேப் 20 லேப்போ ஓட்டும் ரேஸ் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் கிடையாது. இந்த ரேஸ் ஒரு எண்டுரன்ஸ் ஃபார்மேட் ரேஸ். அதாவது 24 மணி நேர ரேஸ். இன்றைக்கு மதியம் ஒரு மணிக்கு கார் எடுத்தால் அடுத்த நாள் மதியம் ஒரு மணி வரைக்கும் கார் ஓட்ட வேண்டும்.


ஒரு டீமில் மூன்றிலிருந்து ஐந்து நபர்கள் வரைக்கும் இருப்பார்கள். அவர்கள் மாத்தி மாத்தி ஓட்ட வேண்டும். ஒரு டிரைவர் குறைந்தது 2 மணி நேரமாவது கார் ஓட்ட வேண்டும். 24 மணி நேரம் இருக்கும் என்பதால் மெல்ல ஓட்ட முடியாது. மினிமம் ஸ்பீட் லெவல் 240 கிலோமீட்டர் இருக்க வேண்டும். இந்த ஸ்பீடு 24 மணி நேரம் ஓட்டுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

இது வெறும் டிரைவர் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. 24 மணி நேரமும் ஓடக்கூடிய அளவுக்கு கார் மிகச்சிறப்பான முறையில் தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதில் மைலேஜ், டயர், மெக்கானிக்கல் ப்ராப்ளம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரு மெக்கானிக் டீம் இருக்க வேண்டும். ஆவரேஜ் பிட் ஸ்டாப் டைம் 45 லிருந்து 55 செகண்ட். இந்த நேரத்தில் பெட்ரோல் போடுவது, டிரைவர் மாற்றுவது என எல்லாத்தையும் செய்ய வேண்டும்.

தொடர்ந்து பல மணி நேரம் குறைந்தது 240 கிலோ மீட்டர் ஸ்பீடு ஓட்டுவதற்கு தேவையான கடுமையான பயிற்சி தேவை. அப்படி தொடர்ந்து ஆறு மணி நேரம் ஓட்டி பயிற்சி எடுக்கும் போது தான் நடிகர் அஜித்துக்கு ஆக்சிடென்ட் ஆனது. அஜித் டீமில் தற்போது நான்கு டிரைவர்கள் இருக்கிறார்கள். ஆளுக்கு குறைந்தது ஆறு மணி நேரம் என்கின்ற வகையில் மின்னல் மாதிரி பறக்க வேண்டும்.

இதில் எந்த டீம் 24 மணி நேரத்தில் அதிக தூரம் ஓட்டி இருக்கிறார்களோ? அவர்கள் தான் வின்னர். இன்று தொடங்கி நாளை ரேஸ் முடிவடைய இருக்கின்றது. அஜித் நினைத்திருந்தால் எந்த சிரமமும் இல்லாமல் நடித்துவிட்டு பல கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் ஒரு ரேசுக்காக இந்த வயதில் இவ்வளவு கடுமையாக தன்னை தயார்படுத்திக் கொண்டு பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்கின்றார் அஜித். அவரின் டீம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று பலரும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Next Story