கேம் சேஞ்சர் தெலுங்குல இத்தனை கோடி வசூலா...? இருந்தாலும் ஆர்ஆர்ஆர் ஐ தாண்ட முடியலயே..!
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் கடந்த ஆண்டு வெளியானது. இது படு பிளாப் ஆகவே ரசிகர்கள், நெட்டிசன்கள் என அனைவரும் படத்தை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இதனால் அடுத்து வெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்கினார். இது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ரிலீஸ் ஆனது. படத்தில் வழக்கமான பாணி தான். கிளைமாக்ஸ் மட்டும் சூப்பர்னு விமர்சனங்கள் வந்தவண்ணம் இருந்தன.
படத்தின் முதல் நாள் வசூல் தெலுங்கில் 38 கோடியையும், தமிழில் 2 கோடியையும், இந்தியில் 7 கோடியையும் அள்ளியது. அதே போல கன்னடத்தில் 0.1 கோடியும், மலையாளத்தில் 0.03 கோடியும் என வசூலித்தது. இந்தப் படம் மொத்தம் 47.13கோடியை முதல் நாளில் வசூலித்து கிட்டத்தட்ட 50 கோடியை நெருங்கியுள்ளது.
ஆர்ஆர்ஆர்: அதே நேரம் படத்தின் வசூலானது முதல் நாளில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தை விட பின்தங்கியுள்ளது. முதல் நாளில் உலகளவில் 223 கோடி வசூலித்துள்ளது. இந்திய அளவில் 133 கோடியை வசூலித்தது.
புஷ்பா 2: சமீபத்தில் வந்த புஷ்பா 2 முதல்நாளில் உலகளவில் 294 கோடியை வசூலித்தது. இதுதான் அதிகமான வசூலைக் குவித்த இந்தியப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. புஷ்பா 2 படமானது தற்போது கேம்சேஞ்சர் ரிலீஸ் ஆகியுள்ளதால் வசூலில் கொஞ்சம் சரிவை சந்தித்துள்ளது.
50 கோடி: 2022ல் ராம்சரணும், ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் படம் பரபரப்பாகப் பேசப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கரும் கிடைத்தது. இப்போது ராம்சரண் தனியாக நடித்த இந்தப் படத்திற்கு வசூல் 50 கோடியைத் தாண்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமான பார்முலா: அதேநேரம் கேம் சேஞ்சர் படமும் ஷங்கரின் வழக்கமான பார்முலாவாகத்தான் உள்ளது. காதலன், சிவாஜி, எந்திரன், இந்தியன், முதல்வன், பாய்ஸ், ஐ என அத்தனை படங்களின் கலவையாக உள்ளது என்றும் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள். பிரம்மாண்டம் என்றாலே இப்படித்தான் இருக்கணுமா என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.