கேம் சேஞ்சர் படத்துக்கு எதிர்பார்ப்பே இல்ல... பெரிய பிரச்சனையில் வசமா சிக்கிடுச்சே..!
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இந்தியன் 2படத்தைத் தொடர்ந்து வெளிவரக் காத்திருக்கும் படம் கேம் சேஞ்சர். படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.
ஆனாலும் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்காது என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி. அடுத்து படத்திற்கு வரும் சிக்கல் குறித்தும் பேசியுள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
கேம் சேஞ்சர் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்ல. அதுதான் உண்மை. என்னதான் ஷங்கர் படமாக இருந்தாலும் இது ஒரு பான் இண்டியா படம்னு பொய் சொன்னாலும் மக்களுக்குத் தெரியும் இது ஒரு டப்பிங் படம்னு.
எல்லாத்துக்கும் மேல ராம்சரணுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இல்லை. அல்லு அர்ஜூனுக்கு இருக்குற ரசிகர்கள் அவருக்கு இல்லை. அதுக்கு அப்புறம் பார்த்தா ஷங்கரின் முந்தைய படம் இந்தியன் 2 பெரிய அளவில் போகல.
முதல் நாள் முதல் ஷோ பார்க்கணும்கற ஆர்வம் ரசிகர்களுக்கு வராது. ஏன்னா இந்தியன் 2 பார்த்த அனுபவம் இருக்கு. படம் நல்லாருந்தா அப்புறம் வந்துடுவாங்க. இதுல இன்னொரு சிக்கல் இருக்கு. இந்தியன் 3 படத்தை இவரு சொன்ன மாதிரி முடிச்சிக் கொடுக்கல.
இன்னும் 80 கோடி ரூபா பணம் கேட்குறாருன்னு புகார் எழுகிறது. அந்த அடிப்படையில் கேம் சேஞ்சர் படத்துக்கு ரெட் போடுங்கன்னு லைகா சார்பாக தமிழ்க்குமரன் கவுன்சில்ல ஒரு புகார் கொடுத்துள்ளார்.
லைகா, தமிழ்க்குமரன்னு சொன்னாலும் பின்னணியில் இருக்குறது ரெட்ஜெயண்ட் நிறுவனம்தான். அவங்க தான் ஆபரேட் பண்றாங்க. கவுன்சில் தலைவரா இருக்குற தேனான்டாள் முரளி வந்து திமுகவைச் சேர்ந்தவர். ரெட் ஜெயண்ட் இந்தப் படத்துக்குத் தடை போடச் சொன்னா கேம் சேஞ்சர் ரிலீஸ் ஆகறதுக்கே சிக்கல் ஏற்படும்.
அது சட்டப்படி தவறு. ஷங்கர் மீது புகார் இருந்ததுன்னா அவரை அழைத்துப் பேசணும். உங்களை மாதிரி ஒரு தயாரிப்பாளர் பணத்தைக் கொட்டி எடுத்த படத்தைத் தடுப்பதுங்கறது தவறான விஷயம். அந்தத் தவறைத் தயாரிப்பாளர் சங்கத்தைக் கையில் வைத்துக் கொண்டு ரெட் ஜெயண்ட் நிறுவனமும், லைகாவும் செய்ய நினைக்கிறது ரொம்ப தவறான விஷயமாத் தான் நான் பார்க்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கேம் சேஞ்சர் படம் வரும் பொங்கல் தினத்தையொட்டி 10ம் தேதி வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சனையை சமாளித்து படம் வெளியாகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.