ஸ்பெஷல் ஷோவுக்கு பர்மிஷன்.. டிக்கெட் விலை மட்டும் இவ்வளவா?.. AA-க்கு டப் கொடுக்கும் ராம்சரண்!..

by Ramya |
game changer
X

game changer

கேம் சேஞ்சர்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த படத்தில் நடிகர் ராம்சரனுடன் இணைந்து அஞ்சலி, கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கடந்த 2 வருடங்களாக இந்த திரைப்படத்தை பார்த்து பார்த்து இயக்கி இருக்கின்றார் இயக்குனர் ஷங்கர்.

இப்படத்தை தனது பாணியில் மிகவும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கின்றார். இப்படத்தில் இருந்த 5 பாடல்களுக்கு மட்டுமே கிட்டதட்ட 75 கோடி செலவானதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் பாடல்கள் அனைத்துமே வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.


டிரெய்லரை வைத்து பார்க்கும் போது படம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் என்பது தெரிய வருகின்றது. இந்த படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருக்கின்றார். மேலும் ஊழலுக்கு நடக்கும் போராட்டம் இப்படத்தில் காட்டப்பட்டிருக்கின்றது.

இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ஜனவரி 10ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. பேன் இந்தியா திரைப்படமாக அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகின்றது. இப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனர் சங்கர் தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாக இருக்கின்றார். இப்படம் ஷங்கருக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். காரணம் இந்தியன் 2 திரைப்படத்தின் தோல்வி.

இதுவரை தோல்வியை சந்தித்திராத ஷங்கர் இந்தியன் 2 திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய அவமானத்தை சந்தித்தார். இதனால் கேம் சேஞ்சர் திரைப்படம் ஷங்கருக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு ஆந்திரா அரசு அனுமதி வழங்கியிருக்கின்றது. அதாவது அதிகாலை 4 மணி காட்சி மட்டுமில்லாமல் நள்ளிரவு ஒரு மணி காட்சிக்கு அனுமதி கிடைத்துள்ளது.

ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் டிக்கெட்டின் விலை தாறுமாறாக உயர்ந்து இருக்கின்றது. மிட்நைட் ஷோவுக்கு 600 ரூபாய் டிக்கெட் கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. காலை 4 மணி காட்சிகளுக்கு ஒவ்வொரு டிக்கெட்க்கும் 170 முதல் 200 வரை கூடுதலாக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 11ம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் டிக்கெட்டுகளுக்கு கூடுதல் கட்டணத்தை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.


இந்த செய்தி தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே புஷ்பா 2 திரைப்படத்திற்கு ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. ஒரு பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராம்சரண் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றாலும் ஒரு பக்கம் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

Next Story