கெளதம் மேனனுடன் கைக்கோர்க்கும் முன்னணி இயக்குனர்… ஹீரோக்கு செம வாழ்க்க தான்!
Gautham Vasudev Menon: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் படத்தின் சுவாரஸ்ய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் ஏ சென்டர் ஆடியன்ஸ்களுக்கு மிக பிடித்த இயக்குனர்கள் பட்டியல் வைத்தால் முக்கிய இடம் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு தான். இவர் இயக்கத்தில் வெளியான எல்லா படங்களுமே ஸ்டைலிஷ் காட்சிகளாகவே இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் கௌதம் மேனனின் ஹீரோவாக நடித்து விட்டால் அவர்களுக்கு அது கேரியரின் சூப்பர்ஹிட்டாகவும் அமையும். சூர்யா, சிம்பு உள்ளிட்டோரின் சினிமா பட்டியலை எடுத்துக்கொண்டால் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படங்களே முன்னிலை வகிக்கும்.
அந்த வகையில் சூப்பர்ஹிட் இயக்குனராக இருந்த கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கவும் தொடங்கினார். அதில் அவருக்கு ஏகப்பட்ட நஷ்டம் வர தற்போது அந்த கடனை அடைக்க சினிமாவில் தனி கவனம் செலுத்தி வருகிறார். முக்கிய வேடங்களில் சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.
தற்போது மீண்டும் இயக்கத்தில் கவனம் செலுத்த இருக்கிறார். அவர் இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் படத்தின் கதையை வெற்றிமாறன் எழுதி இருக்கிறாராம். படத்தின் ஹீரோவாக ரவி மோகன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வருகிறதாம்.
ரவி மோகன் தன்னுடைய விவாகரத்துக்கு பின்னர் தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஜீனி, தனி ஒருவன் 2 படங்களில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் இப்படம் அவரின் கேரியருக்கு மிக உச்சமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.