1. Home
  2. Cinema News

Jananayagan: ஜனநாயகனுக்கு ஆப்பு வைத்த கோட்!.. கடைசிப் படத்துல இப்படி ஒரு சிக்கலா?..

jananayagan

ஜனநாயகன்

கோட் திரைப்படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். விஜய் தீவிர அரசியலுக்கு போய் விட்டதால் இது அவரின் கடைசிப் படமாக கருதப்படுகிறது. அதேநேரம் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்தே அவர் அரசியலில் நீடிப்பாரா இல்லை சினிமாவுக்கு திரும்பவாரா என்பது தெரிய வரும்.

தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடித்த வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஜனநாயகன் என ஏற்கனவே செய்திகள் வெளியானது. மேலும் தமிழுக்கு ஏற்றார் போல கதையில் சில மாற்றங்களை ஹெச்.வினோத் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்திருக்கிறார். இந்த படம் 2026 ஜனவரி 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் தமிழக மற்றும் கேரள உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வாங்கியிருக்கிறார். தமிழக வெளியீட்டு உரிமை 100 கோடி, கேரளா உரிமை 15 கோடி என மொத்தம் 115 கோடிக்கு வாங்கி இருக்கிறார் ராகுல்.

jananayagan

கேரளாவில் லியோ திரைப்படம் நல்ல வசூலை பெற்றது. எனவே ஜனநாயகன் படத்தை கேரள வினியோகஸ்தர்களிடம் அதிக விலைக்கு விற்கலாம் என ராகுல் கணக்கு போட்டிருந்தாராம். ஆனால் கோட் படம் கேரளாவில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்பதால் அதை காரணம் காட்டி கேரள வினியோகஸ்தர்கள் ஜனநாயகனை மிகவும் குறைந்த விலைக்கு கேட்க, கேரளாவில் படத்தை சொந்தமாக வெளியிடுவது என முடிவெடுத்திருக்கிறாராம் ராகுல்.

ஒருபக்கம் தமிழ்நாடு, கேரளா சேர்த்து ஜனநாயகம் படம் 225 கோடிக்கு மேல் வசூல் செய்தால் மட்டுமே ராகுலுக்கு லாபம் கிடைக்கும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். இந்த ராகுல்தான் அஜித் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தின் தயாரிப்பாளர் என்பது கூடுதல் தகவல்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.