கோட் படத்தின் 25 நாள் வசூல் நிலவரம்… லாபமா? நஷ்டமா? உண்மையை உடைத்த பிரபலம்

GoatMovie: கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் தயாரிக்கப்பட்ட தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் 25 நாட்கள் வசூல் விபரம் குறித்து பிரபல திரை விமர்சகர் பிஸ்மி குறிப்பிட்டு இருக்கிறார்.

அதில், படக்குழுவின் சம்பளம் 234.15 கோடி, புரொடக்‌ஷன் செல்வு 99 கோடி என மொத்த பட்ஜெட்டும் 333.15 கோடியில் அடங்கியது. தமிழக தியேட்டர் விநியோகம் 76 கோடிக்கும், கேரளா 16 கோடிக்கும், கர்நாடகா 13 கோடிக்கும், ஆந்திரா 15 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டது.

வட இந்தியாவிற்கு 15 கோடிக்கும், ஒரிசா 25 லட்சத்துக்கும், வெளிநாட்டு விநியோகம் 70 கோடிக்கும், ஆடியோ 24 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை 112 கோடிக்கும், சேட்டிலைட் 85 கோடிக்கும் என மொத்த வியாபாரம் 416.25 கோடிக்கும் நடந்தது.

திரையரங்கு வியாபாரம் 205.25 கோடி எனக் கூறப்படுகிறது. கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் 30.6 கோடி, இந்திய அளவில் 78. 32 கோடி, வெளிநாடுகளில் 48 கோடி என உலகளவில் மொத்தமாக 128.32 கோடி வசூல் செய்தது.

கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாள் 30 கோடியும், இரண்டாவது நாளில் 18 கோடியும், ஏழாவது நாள் முடிவில் 143 கோடியும், 14 வது நாள் முடிவில் 191 கோடியும், எக்கசக்கமாக 205 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. விநியோகிஸ்தர்களின் பங்கு மட்டுமே 110 கோடி எனக் கூறப்படுகிறது.

இதனால் விஜயின் தமிழக விநியோகிஸ்தரின் வட்டி மற்றும் செலவு போக 20 கோடி வரை லாபம் கிடைத்ததாம். கேரளாவில் இப்படம் அதிகபட்சமாக 13 கோடி வரை மட்டுமே வசூல் செய்தது. விஜயின் கோட்டை என கருதப்படும் கேரளாவில் விநியோகிஸ்தருக்கு எட்டு கோடி வரை நஷ்டம் எனக் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் இப்படம் அதிகபட்சமாக 30 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருந்தது. அந்த வகையில் 13 கோடி பங்கை பெற்ற விநியோகஸ்தருக்கு ஒரு கோடி நஷ்டமாக மாறி இருக்கிறது. வட இந்தியாவில் 12 கோடி ரூபாய் பங்காக ஏஜிஎஸுக்கு கிடைத்தது.

கேரளா மற்றும் கர்நாடகா விநியோகிஸ்தர்களை தவிர மற்ற விநியோகிஸ்தர்களுக்கு லாபம் கிடைத்ததுள்ளது. இதில் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு லாபம் மட்டுமே 126.10 கோடி ரூபாய். இதில் வட இந்தியா மற்றும் ஆந்திரா விநியோகிஸ்தர்களின் ரீபண்டான 10.5 கோடியை கழித்தால் 115.60 கோடி ரூபாய் லாபமாக இருக்கிறது.

இதனால் கோட் திரைப்படம் வணிகரீதியாக வெற்றி படம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it