குட் பேட் அக்லி சோலிய முடிச்சிவிட்ட இளையராஜா!.. மொத்தமா தூக்கிட்டாங்களே!…
இளையராஜாவின் காப்புரிமை நோட்டீஸ்:
Good Bad Ugly: இசையமைப்பாளர் இளையராஜா கடந்த சில வருடங்களாகவே தன்னிடம் அனுமதி இன்றி தனது பாடல்களை பல புதிய திரைப்படங்களிலும் பயன்படுத்துவதற்கு எதிராக Copy Rights அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பி வருகிறார். பாடல்களை நீக்க வேண்டும் என்றும் அதற்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் எனவும் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறார்.
கூலி படத்திற்கு நோட்டீஸ்:
ரஜினியின் Coolie உள்ளிட்ட பல படங்களுக்கும் அவர் நோட்டீஸ் அனுப்பினார். அதேபோல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வெளியான Good bad ugly திரைப்படத்தில் தனது மூன்று பாடல்களை பயன்படுத்தியிருப்பதாக படம் வந்தபோதே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 5 கோடி நஷ்ட ஈடும் கேட்டிருந்தார்.
தயாரிப்பு நிறுவனம் விளக்கம்:
குட் பேட் அட்லி திரைப்படத்தை ஆந்திராவை சேர்ந்த மைதிரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இளையராஜாவை நோட்டீஸுக்கு பதில் அளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அந்த பாடல்களின் உரிமையை வைத்திருக்கும் ஆடியோ நிறுவனத்திடம் என்ஓசி பெற்றதாக கூறியது.
குட் பேட் அக்லி நீக்கம்:
ஆனால் அதை ஏற்காத நீதிமன்றம் படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை விதித்திருந்தது. தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருக்கிறது. இந்நிலையில் நீதிமன்றத்தின் தடையை மீறி தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக இளையராஜா மீண்டும் நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு செய்தார். இது நீதிமன்ற அவமதிப்பு எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் Netflix தளத்திலிருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டிருக்கிறது.
இளையராஜா இதுவரை நோட்டீஸ் அனுப்பிய திரைப்படங்கள்:
- Mrs and Mr
- Coolie
- Good Bad Ugly
- Manjumal Boys
