Good Bad Ugly: இருந்த ஒத்த சீனையும் காலி பண்ணியாச்சு… இளையராஜா மீது கடுப்பில் அஜித் ரசிகர்கள்!
Good Bad Ugly: அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது இளையராஜா கொட்டிய வன்மத்தின் விளைவால் அஜித் ரசிகர்கள் மீதான கடுப்பை சம்பாரித்து கொண்டு இருக்கிறார்.
துணிவு படத்திற்கு பின்னர் பெரிய இடைவேளையில் இருந்தவர் நடிகர் அஜித்குமார். இரண்டு ஆண்டு இடைவேளைக்கு பின்னர் அவர் நடிப்பில் ஒரு சில மாதங்கள் இடைவேளையில் தொடர்ச்சியாக இரண்டு திரைப்படங்கள் ரிலீஸாகி ஆச்சரியப்படுத்தியது.
அதில் முக்கிய படமாக எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்து இருந்தது குட் பேட் அக்லி. ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் இப்படம் வசூலை குவிக்கும் என நினைத்து இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது.
கிட்டத்தட்ட அஜித்தின் மொத்த படங்களையும் ஸ்பூஃப் செய்து வெளியிடப்பட்டு இருப்பது போல குட் பேட் அக்லி இயக்கப்பட்டு இருந்தது. படத்தில் பெரிய அளவு கதை என்பது இல்லாமலே இருந்தது. இப்படி ஒரு கதையை எப்படி அஜித் ஒப்புக்கொண்டார் என ஆச்சரியம் இருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் மிகப்பெரிய பிளஸாக இருந்தது ஜிவி பிரகாசின் பின்னணி இசை. அதுமட்டுமல்லாமல் மார்க் ஆண்டனி படத்தில் கைகொடுத்தது போல ரெட்ரோ பாடல்கள்.
அந்த வகையில் இளையராஜாவின் ஒத்த ரூபா உள்ளிட்ட சில பாடல்கள் படத்தில் இடம்பெற்று இருந்தது. அது படத்திற்கு பெரிய பிளஸாக அமைந்தது.இந்நிலையில் படத்தில் இருந்து அந்த பாடல்களை நீக்க வேண்டும் என இளையராஜா நீதிமன்ற படியேறினார்.
தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருந்து இப்படம் திடீரென நீக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு நாள் கழித்து இன்று படம் மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் எதிர்பார்த்த போல இளையராஜாவின் பாடல்கள் நீக்கப்பட்டுள்ளது.
அதிலும் அர்ஜுன் ரெட்டி டான்ஸ் ஆடும் ஒத்த ரூபா பாடலை எடுத்து விட்டு ஒரு பின்னணி இசையை மட்டுமே சேர்ந்துள்ளனர். படத்தின் முக்கிய காட்சியின் இந்த மாற்றம் அஜித் ரசிகர்களை வெறுப்படைய செய்ய வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
