ஜிபி முத்து வீடு முற்றுகை.... தனக்குத் தானே ஒழிக கோஷம் போட்டு அலப்பறை!

பிரபல யூடியூபர் ஜிபி முத்துவின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பெருமாள்புரம். இவரது வீடு இன்று முற்றுகை இடப்பட்டுள்ளது. நடந்தது என்னன்னு பார்க்கலாம்.
கடந்த சில மாதங்களாகவே ஒரு கோவில் மற்றும் கீழ்த்தெருவிற்கான பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் 2 தினங்களுக்கு முன்பாக ஜிபி முத்து தெருவையே காணோம்னு கலெக்டர் ஆபீஸில் புகார் கொடுத்தார். அது பரபரப்பாகப் பேசப்பட்டது. போலீஸாரும் விசாரணையைத் தொடங்கினார்.
இந்நிலையில் நேற்று ஒரு தொலைக்காட்சியில் கோவில் பற்றியும், ஊர் பற்றியும் அவதூறாகப் பேசினாராம். இதை அறிந்த ஊர்ப்பொதுமக்கள் அவரது வீட்டை முற்றுகை இட்டனர். அவருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஜிபி முத்துவும் தன் ஆவணங்களை எடுத்துக் கொண்டு போலீசாரிடம் பல தகவல்களைத் தெரிவித்தார். அப்போது அவருக்கும், அப்பகுதியினருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. இது பொய்யான புகார் என்றும் இந்தக் கோவிலை அகற்றுவதற்காக இப்படி செயல்களில் ஈடுபடுகிறார் என ஜிபி முத்து மீது குற்றம்சாட்டினர்.

ஏற்கனவே கீழ்த்தெரு இங்குதான் உள்ளது. நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால் கையில் அதிகமாக ஆவணங்கள் வைத்துக் கொண்டு ஜிபி முத்து பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் ஜிபி முத்து ஒழிக என்று கோஷம் எழுப்பினர்.
அதற்கு தனக்குத் தானே ஒழிக என்று ஜிபி முத்துவும் கோஷம் எழுப்பியதால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இருதரப்பும் சமாதானமான பிறகே கோவில் கட்டுவதற்கான வேலைகள் தொடங்கப்பட வேண்டும் என போலீசார் பேச்சுவார்த்தையில் தெரிவித்துள்ளனர்.