குட் பேட் அக்லியில் தல டான்ஸா? அப்டேட்டை அள்ளிவீசிய ஜிவி பிரகாஷ்

அனைவரின் எதிர்பார்ப்பாக இருப்பது அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படம். விடாமுயற்சி படத்தின் கலவையான விமர்சனம் அஜித் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் குட் பேட் அக்லி படத்தின் டீஸர் வெளியாகி அஜித் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியிருக்கிறது. விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் நடித்துள்ள திரைப்படம் தான் குட் பேட் அக்லி.
ஒரு கட்டத்தில் இரு படங்களிலும் ஒரே நேரத்தில் கால்ஷீட் கொடுத்து இரவு பகல் பாராமல் அஜித் நடித்தார். ஏனெனில் கார் ரேஸில் அவர் கலந்துகொள்ள இருந்ததனால் இரு படங்களையும் முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அஜித் இருந்தார். அதற்கேற்ப சொன்ன தேதியில் இரு படங்களையும் முடித்துவிட்டுத்தான் ரேஸில் பங்கேற்க சென்றார். முன்னதாக விடாமுயற்சி படம் வெளியாகி சுமாரான வரவேற்பைத்தான் பெற்றது.
அஜித் ரசிகர்களுக்கே இந்தப் படம் திருப்திகரமாக இல்லை. அதனால் மற்ற ரசிகர்களும் விடாமுயற்சி படத்தை கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் டீஸர் ரசிகர்கள் மட்டுமில்லாமல் வினியோகஸ்தர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தளவுக்கு படத்தில் மாஸ் எலிமெண்டை வைத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
ஒரு ரசிகனாக ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் மீது மிகுந்த அன்பு கொண்டவராக இருப்பவர்.விடாமுயற்சி படத்தின் முதல் காட்சியிலேயே அதை பார்க்க முடிந்தது. ஏன் குட் பேட் அக்லி படத்தின் டீஸரை ரோகிணி திரையரங்கில் போடும் போது கூட கத்தி ஆரவாரம் செய்தார் ஆதிக். அதனால் படத்தையும் பெரிய அளவில் எடுத்திருப்பார் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்திற்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைக்கிறார். அவரும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தெறிக்க விடுவோம் என்பதை போல் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அதை போல் இன்று அளித்த ஒரு பேட்டியில் டிஆர் படத்தில் பாடியிருக்கிறாரே என்று ஒரு நிருபர் கேட்க அதற்கு ஜிவி ‘அப்படியா? யார் சொன்னா’ என்று கேட்டார். மேலும் படத்தில் தல ஆடுவது போல பாட்டு இருக்கிறதா? என்று கேட்டதற்கும் சிரித்துக் கொண்டே இதற்கு மேல் இயக்குனரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் என சொல்லிவிட்டு சென்று விட்டார் ஜிவி.